தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!

First Published | Mar 3, 2023, 7:30 AM IST

நம் உடலில் இருக்கும் குடலின் இயக்கத்தை சீராக இயங்க வைக்க இந்த அற்புத டீ நல்ல பலன்களை தரும். 

நம் உடலில் இருக்கும் கெட்ட நச்சுக்களை சரியாக வெளியேற்றினால் ஆரோக்கியம் மேம்படும். அப்படி நச்சுக்கள் வெளியேறாவிட்டால் அசமந்தம், உடல் வலி, செரிமான பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் வரும். உடல் எடை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கும் அற்புத டீயை குறித்து இங்கு காணலாம். 

நம் வீட்டில் இருக்கும் கறிவேப்பிலையை வைத்து இந்த டீயை தயாரிக்கலாம். பொதுவாக நம் வீட்டில் இருக்கும் கருவேப்பிலையை சமையலுக்கு பயன்படுத்துவோம். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை ஒதுக்கிவிட்டு தான் சாப்பிடவே செய்வார்கள். ஆனால் அந்த கருவேப்பிலையில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகள் உள்ளன. அதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 

Tap to resize

கருவேப்பிலை டீயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கருவேப்பிலை டீ நன்கு உதவிபுரிகிறது.

சிலருக்கு வாந்தி குமட்டல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம். இந்த டீயை பருகினால் உடலில் நல்ல மாற்றம் வரும். தினமும் இந்த டீ குடித்து வந்தால் தொப்பை குறையும். சிலருக்கு கொத்து கொத்தாக முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பொடுகு தொல்லை கூட குறையும். 

கருவேப்பிலை டீயில் காணப்படும் மலமிளக்கி பண்புகள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவி செய்கிறது. இதனால் மலச்சிக்கள் பிரச்சனை தீரும். வாய்வு தொடர்பான பிரச்சனைகளும் இந்த டீ அருந்துவதால் குணமாகிவிடும். 

இதையும் படிங்க: தாங்க முடியாத குதிகால் வலி, வாதம், எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் நீங்க பாட்டி வைத்தியம்..!

செய்முறை

ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்ததும் அதில் சுத்தம் செய்த கருவேப்பிலையை போட்டு கொதிக்க விடுங்கள். கருவேப்பிலை சாறு நீரில் இறங்கி வந்ததும் அதை வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து மிதமான சூட்டில் அருந்தலாம். 

இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு விதை சாப்பிட்டு வந்தால்.. 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும்

Latest Videos

click me!