உடல் அசதியை போக்கும் ஆட்டு நல்லி எலும்பு சூப்!

First Published Mar 2, 2023, 12:01 PM IST

உடல் அசதியை போக்கி புத்துணர்வு தரும் ஆட்டின் நல்லி எலும்பு வைத்து அட்டகாசமான ஒரு சூப் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

மட்டன் எனப்படும் ஆட்டு இறைச்சயின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதத்தில் பயன் தருகிறது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் மனித வாழ்விற்கு தேவையான ஊட்டச்சத்தினை தருகிறது. மட்டனில் தேவையற்ற அல்லது பயன் இல்லாத என்று எதுவும் கிடையாது. ஆடு தலை, இரத்தம் , ஈரல்,எலும்பு என்று பல உறுப்புகளை நாம் சமைத்து சமைத்து சாப்பிட்டு இருப்போம்.

அந்த வகையில் இன்று நாம் ஆட்டின் நல்லி எலும்பு வைத்து அட்டகாசமான ஒரு ரசம் ரெசிபியை காண உள்ளோம். இந்த ரசமானது காய்ச்சல், உடல் சோர்வு, தலை பாரம் போன்ற பிரச்னைகளை விரைவில் சரி செய்வதற்கு மிகவும் உதவுகிறது. இதனை க்ளாசில் ஊற்றி பருகலாம் அல்லது சாதித்தால் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் நமக்கு எல்லையில்லா பயனை அளிக்கிறது.

உடல் அசதியை போக்கி புத்துணர்வு தரும் ஆட்டின் நல்லி எலும்பு வைத்து அட்டகாசமான ஒரு சூப் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் ;

நல்லி எலும்பு - 1/4 கிலோ
வெங்காயம் - 2
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை - கையளவு
மிளகுத்தூள்- தேவையான அளவு 

இப்படி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செய்தல் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

செய்முறை :

முதலில் நல்லி எலும்பை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் அலசி வைத்துள்ள ஆட்டின் நல்லி எலும்பினை போட்டு அதில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்

பின் குக்கரில் சிறிது மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 1/2 மணி நேரம் வரை வேக வைக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் ஆட்டுக்காலை வேக வைத்த ஷ்டாக் ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்க வேண்டும். இறுதியாக தேவையான அளவு மிளகு தூள், மல்லித் தழை தூவி கொதி வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு பருகினால் சத்தான, காரசாரமான நல்லி எலும்பு சூப் ரெடி!

click me!