பாரம்பரிய வைத்தியமான சித்த வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியத்தில் தூதுவளை கீரைக்கென ஒரு தனி இடம் உள்ளது. சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பல நோய் தொற்றுகளுக்கு உடனடி தீர்வு அளிக்கும் தன்மை கொண்டது. மேலும் நாட்டு மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தூதுவளையில் அதிக அளவில் கால்சியம் உள்ளதால், எலும்புகள் பலம் பெறுகிறது. மேலும் உறுதியான பற்களையும் தருகிறது. இந்த கீரை பித்தம் மற்றும் வாத நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. மேலும் பாம்பின் விஷத்தை முறியடிக்கும் தன்மை உள்ளதாக கூறப்படுகிறது.
தூதுவளை இலையை பறித்து துளசி போன்று மென்றும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் அதன் மருத்துவ குணங்கள் நேரடியாக முடியும். மேலும் இந்த இலைகளை நிழலில் உளர்த்தி பொடியாக செய்தும் பயன்படுத்தலாம். அல்லது இலைகளை பறித்து, நெய்யில் வதக்கி சாப்பிடலாம். அல்லது ரசம், துவையல், பருப்பு கூட்டு என்று பல்வேறு விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் தூதுவளை இலை வைத்து அருமையான ஹெல்த்தியான ரசம் செய்ய உள்ளோம்.
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தூதுவளை கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டாலே நெஞ்சில் தேங்கும் கபம், சளி போன்ற பிரச்சனைகளை வருமுன் தடுத்திடலாம். அந்த வகையில் இன்று நாம் ஹெல்த்தியான தூதுவளை ரசம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.