நாம் அனவைரும் பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிடுவோம். இட்லியை விட பலரும் தோசையை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் தோசையை தான் அதிகமாக கேட்டு சாப்பிடுவார்கள்.
தோசையில் முட்டை தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை, அடை தோசை, மசாலா தோசை என்று இன்னும் பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் ஒரு தோசை ரெசிபியை பார்க்க உள்ளோம். தோசையில் என்ன புதுமை என்று யோசிக்கிறீர்களா? மதுரை ஸ்பெஷல் கார தோசை ரெசிபியை செய்ய உள்ளோம்.
ஒவ்வொரு ஊரிலும் சில பல உணவுகள் பிரசித்தி பெற்று இருக்கும். உடுப்பி மசாலா தோசை, திருநெல்வேலி அல்வா,மணப்பாறை முறுக்கு, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு சிக்கன்,மைசூர் மதூர் வடை என்று பல வகையான உணவு ரெசிபிக்கள் சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு உணவும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் மதுரையில் ஜிகர்தண்டா, கறி தோசை,பருத்திப்பால் எப்படி பரீட்ச்சையமோ அதே அளவிற்கு பிரசித்தி பெற்ற கார தோசை ரெசிபியை தான் காண உள்ளோம்.