நமது அன்றாட உணவில் தினமும் முட்டைகளை சேர்த்துக் கொள்ளுதல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர். முட்டையில் அதிகளவு ப்ரோட்டீன் உள்ளதால் நம்மை புத்துணர்வாக இருக்க துணை புரிகிறது. மேலும் இதில் மக்னீசியம், இரும்பு, ஜிங்க் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் முட்டையை நாம் அனைவரும் நமது தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக முட்டையை பொடிமாஸ், ஆம்லெட், ஹாஃப் பாயில், வேக வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மேலும் சிலர் முட்டை வைத்து முட்டை போண்டா , முட்டை பப்ஸ், எக் ஃப்ரைட் ரைஸ் என்று இன்னும் பல விதங்களில் முட்டை வைத்து செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் முட்டை வைத்து சூப்பரான,கரசராமான முட்டை ரோஸ்ட் ரெசிபியை காண உள்ளோம்.
இதனை ஒரு முறை செய்து கொடுத்தால், பின் மீண்டும் மீண்டும் இதனை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். ப்ரோட்டீன், ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்களை உள்ளடக்கிய முட்டை வைத்து காரசாரமான முட்டை ரோஸ்ட் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்