வீடே கமகமக்கும் இறால் புட்டு! எவ்வளவு செய்தாலும் போதாது!

First Published | Mar 1, 2023, 5:26 PM IST

 இன்று நாம் இறால் வைத்து ஒரு அட்டகாசமான ரெசிபியை மிகக் குறைந்த நேரத்தில் அதிக சுவையை கொண்ட இறால் புட்டு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் பார்க்க உள்ளோம்.

கடல் உணவு வகையை சேர்ந்த இறால் அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஒரு உணவு ஆகும். எப்போதும் சிக்கன்,மட்டன் என்று சாப்பிட்டு அலுத்து போனவர்கள் இறால் ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இறால் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளும் சூப்பராக இருக்கும். இறால் வைத்து இறால் குருமா, இறால் பிரியாணி,இறால் மசாலா, இறால் குழம்பு என்று பல்வேறு ரெசிபிகளை செய்ய முடியும். அந்த வகையில் இன்று நாம் இறால் வைத்து ஒரு அட்டகாசமான ரெசிபியை மிகக் குறைந்த நேரத்தில் அதிக சுவையை கொண்ட இறால் புட்டு ரெசிபியை
வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் பார்க்க உள்ளோம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் ஆபாரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

இறால் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 5 பற்கள்
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 2 ஸ்பூன்
சீரகம் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை,-1 கொத்து
மல்லித்தழை -கையளவு

சளி,இருமலை விரட்டிட தூதுவளை இலை ரசம் செய்து சாப்பிடுங்க!

செய்முறை :

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்துசெய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு,மல்லித்தழை ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அலசி வைத்துள்ள இறாலை மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரவெனஅரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

Latest Videos


பின் அதில் சிறிது பொடியாக 1/4 ஸ்பூன் பூண்டு,1/4 ஸ்பூன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு பின் பொடியாக அரிந்து வைத்துள்ள .மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கி சுண்டி வந்த பின் அதில் அரைத்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

அடுத்தாக அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். இறால் வெந்து உதிரியாக வரும் வரை கிளறி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை தூவி, லெமன் ஜூஸ் பிழிந்தால் சூப்பரான இறால் புட்டு ரெடி!  நீங்களும் இதனை ஒரு முறை ட்ரை பண்ணி அசத்துங்க!

click me!