செட்டிநாடு மாப்பிள்ளை விருந்து ஸ்பெஷல் பால் பனியாரம்

Published : Mar 14, 2025, 08:31 PM IST

செட்டிநாட்டு இனிப்பு வகைகள் ஆரோக்கிமும், எளிதாக ஜீரணமாகக் கூடிய சுவையான தன்மை கொண்டவை. அதிகம் திகட்டாத உணவுடன் வீட்டிற்கு விருந்திற்கு வரும் மாப்பிள்ளையை வரவேற்கவும், கல்யாண விருந்துகளில் பரிமாறவும் இருக்கும் செட்டிநாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக உள்ளது இந்த பால் பனியாரம்.

PREV
15
செட்டிநாடு மாப்பிள்ளை விருந்து ஸ்பெஷல் பால் பனியாரம்
பால் பனியாரம் :

தென்னிந்திய சமையலில் பனியாரம் என்றால் ஒரு தனி இடம் உண்டு. குறிப்பாக பால் பனியாரம், வெளியில் மொறு மொறுப்பாகவும், உள்ளே பஞ்சு போன்ற மெல்லிதான தோற்றம் மற்றும் பால், நாட்டு சர்க்கரையின் இனிப்புடன் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பாரம்பரிய இனிப்பு சுவையை தரும். இது வடை, போண்டா போல் இருந்தாலும் தனித்துவமான சுவை கொண்டதாக இருக்கும். செட்டிநாட்டில் விருந்திற்கு வரும் மாப்பிள்ளைக்கு பரிமாறும் முக்கியமான இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று. 
 

25
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
தேங்காய் - 1 
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

35
செய்முறை :

- பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- சிறிது உப்பு சேர்த்து மெதுவான மாவாக, தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு புறம் தேங்காயை துருவி, கெட்டியாக பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- தேங்காய் பாலுடன் சிறிது ஏலக்காய் தூள், சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும், சிறிய உருண்டையாக எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- சிறிது ஆறியதும், தேங்காய் பாலில் போட்டு, 5 நிமிடங்கள் ஊற விட்டு எடுத்து பரிமாறலாம்.

மதுரை ஸ்பெஷல் கறி தோசை : வாசனை கமகமக்க வீட்டிலேயே செய்யலாம்

45
சிறப்பு குறிப்புகள் :

- மாவு அரைக்கும் போது சிறிது கூட அரிசி, உளுந்தம் பருப்பு இல்லாமல் நைசாக அரைக்க வேண்டும். இல்லா விட்டால் எண்ணெய் சேர்க்கும் போது வெடிக்க துவங்கி விடும்.
- இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் தேங்காய் பாலில் ஊற வைக்காமல், அப்படியே சாப்பிடலாம்.
- தேங்காய் சட்னி, கார சட்னி, காரசாரமான சாம்பாருடன் வைத்து சாப்பிடால் அதன் சுவை அமோகமாக இருக்கும்.
- இந்த மாவை அரைத்த உடன் பனியாரத்தை பொரித்து எடுத்து, செய்து விட வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு செய்தால் புளிப்பு சுவை வந்து விடுவதுடன், எண்ணெய்யையும் அதிகமாக உறிஞ்சி விடும்.
 

55
பரிமாறும் முறை :

- சிறிய பவுலில் தேங்காய் பாலுடன் ஊறிய பனியாரத்தை வைத்து கொடுக்கலாம்.
- எண்ணெய்யில் பொரித்த உணவு, இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் மாவை சற்று தண்ணீராக கரைத்து ஆப்பமாகவும் ஊற்றி சாப்பிடலாம். 
- உளுந்து சேர்த்து சாப்பிடுவதால் எலும்புகளுக்கு வலுவானதாக இருக்கும். தேங்காய் பாலும் உடலுக்கு குளிர்ச்சியை தரும். 
- இதை காலை உணவாகவும், மாலை ஸ்நாக்சாகவும் செய்து கொடுக்கலாம்.

click me!

Recommended Stories