பஞ்சாபி ஸ்டைல் சோலே மசாலா...அட்டகாசமான சுவையில் செய்யலாம்

Published : Mar 13, 2025, 04:51 PM IST

பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது கொண்டைக் கடலை சேர்த்து செய்யப்படும் உணவுகள் ஆகும். அவற்றில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடக் கூடியது சோலே மசாலா. இதை ரெஸ்டாரன்ட்டில் சுவைக்க அதிகம் செலவு செய்ய வேண்டும். அதை மிச்சம் செய்ய வீட்டிலேயே சூப்பராக செய்து மகிழலாம்.

PREV
16
பஞ்சாபி ஸ்டைல் சோலே மசாலா...அட்டகாசமான சுவையில் செய்யலாம்
பஞ்சாபி சோலே மசாலா :

பஞ்சாபி உணவுகளில் சுவையை துல்லியமாக வெளிப்படுத்தும் ஒரு பதார்த்தம் சோலே மசாலா. அதன் நறுமணமூட்டும் மசாலா கலவையும், கிரேவி உடைய வறுத்து வேகவைத்த கடலை சுவையும் உணவகங்களுக்கே தனி அடையாளம் கொடுத்துள்ளது. ரெஸ்டாரண்ட்களில் மட்டுமே கிடைக்கும் பஞ்சாபி சுவை சோலே மசாலாவை அதே அசத்தலான சுவையில் நம்ம வீட்டிலேயே செய்ய முடியும். இதனால் செலவும் மிச்சம், உடலுக்கும் ஆரோக்கியம். பஞ்சாபி உணவை நம்ம வீட்டு சமையலறையில் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். 
 

26
தேவையான பொருட்கள் :

கொண்டைக் கடலை (கடலை நீரிலிட்டு ஊர வைத்து வேகவைத்தது) - 1 கப் 
பெரிய வெங்காயம் - 2 (நன்றாக நறுக்கியது)
பெரிய தக்காளி - 2 (பேஸ்டாக அரைத்தது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2-3 (நறுக்கியது)
 

36
மசாலா பொருட்கள் :

சீரகம் -1/2 டீஸ்பூன் 
தனியா தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சோலே மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
வெண்ணெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 
கொத்தமல்லி இலை (அலங்காரத்திற்காக)

கொங்கு நாட்டு இளநீர் பாயாசம் – வீட்டிலேயே செய்வது எப்படி?

46
தயாரிக்கும் முறை :

- முதலில், கொண்டைக்கடலையை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலை அதனை குழையாமல் வேக விடவும்.
- கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். சீரகம் சேர்த்து தாளித்து, பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி, அதன் மீது தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வெந்துவிடும் வரை கிளறவும்.

56
வேக வைக்கும் முறை :

- மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சோலே மசாலா பொடி சேர்த்து நன்றாக கலக்கி 2-3 நிமிடம் வதக்கவும்.
- வேகவைத்த கடலையை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து, சிறிய தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கடைசியாக கரம் மசாலா தூவி, நன்கு கிளறி இறக்கவும்.
- மேலே கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

செட்டிநாடு உருளை வறுவல்...இப்படி ஒரு டேஸ்டில் சாப்பிடிருக்கவே மாட்டிங்க
 

66
பரிமாறும் முறை :

- சூடான பரோட்டா, பாஸ்மதி அரிசி, பன்னீர் பரோட்டா, ரொட்டி, பட்டர்நான் போன்றவற்றுடன் சிறப்பான சைட் டிஷ்ஷாக இருக்கும்.
- கொஞ்சம் வெண்ணெய் அல்லது தயிர் சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
- கூடுதல் காரம் தேவைப்பட்டால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

click me!

Recommended Stories