காரடையான் நோன்பு பிரசாதம் : கார அடை, இனிப்பு அடை செய்வது எப்படி?

Published : Mar 13, 2025, 09:15 AM IST

காரடையான் நோன்பிற்கு காராமணியில் செய்த கார அடை மற்றும் இனிப்பு அடை, உருகாத வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து, தங்களின் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கவும் பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். காரடையான் நோன்பிற்கு படைக்கும் கார மற்றும் இனிப்பு அடைகள் செய்முறை இதோ...

PREV
15
காரடையான் நோன்பு பிரசாதம் : கார அடை, இனிப்பு அடை செய்வது எப்படி?
காரடையான் நோன்பு பிரசாதம் :

கணவரின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் கடைபிடிக்கப்படும் காரடையான் நோன்பில் மிக முக்கியமானது அம்பிகைக்கு படைக்கும் கார அடை மற்றும் இனிப்பு அடை தான். எளிமையான அரிசி மாவு, காராமணி ஆகியவற்றை பயன்படுத்தி செய்த இந்த கார அடையை நைவேத்தியமாக அன்னை கெளரிக்கு படைத்து, சாவித்திரி விரதம் இருந்ததால் இதற்கு காரடையான் நோன்பு என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மிக எளிமையாக குறைவான பொருட்களை வைத்தே இரண்டு வகையான பிரசாதங்களை செய்து விடலாம். பாரம்பரியமான தெய்வீக பிரசாதம் என்றாலும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக் கூடிய கார அடை, இனிப்பு அடையை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

25
கார அடை செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்
காராமணி - 1/2 கப் 
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

35
செய்முறை :

- காராமணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊர வைத்தோ அல்லது அடைய தயாரிப்பதற்கு அரை மணி முன்பாக கொதிக்கும் நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரில் காராமணியை கழுவி, 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் 1 கப் அரிசி மாவை லேசாக அரிசி மணம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். 
- அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நறுக்கிய தேங்காய் சேர்த்து ,காராமணி சேர்த்து லேசாக கொதி வரும் வரை விடவேண்டும்.
- தண்ணீர் கொதிக்க துவங்கியதும், வறுத்து வைத்த மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளற வேண்டும்.
- தண்ணீர் முழுவதுமாக வற்றி, மாவு கெட்டியானதும், இறக்கி ஆற வைக்க வேண்டும்.
- ஆறியதும் சிறிய அடைகளாக இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா – வீட்டிலேயே செய்து அசத்துங்க

45
இனிப்பு அடை செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்
காராமணி - 1/2 கப்
வெல்லம் (பொடித்தது) - 3/4 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது
 

55
இனிப்பு அடை செய்முறை :

- காராமணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊர வைத்தோ அல்லது அடைய தயாரிப்பதற்கு அரை மணி முன்பாக கொதிக்கும் நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரில் காராமணியை கழுவி, 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் 1 கப் அரிசி மாவை பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே கடாயில் பொடித்த வெல்லத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி விட வேண்டும்.
- மீண்டும் அதே கடாயில் வெல்ல கரைசலை ஊற்றி மிதமான சூட்டில், ஏலக்காய் தூய், காராமணி, தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதி வந்ததும் வறுத்து வைத்த மாவை சேர்த்து நன்று கிளற வேண்டும். ஒருவேளை மிகவும் இறுக்கமாக இருந்தால் லேசாக வெந்நீர் சேர்த்துக் கொள்ளலாம். 
- சிறிய அடைகளாக தட்டி, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

click me!

Recommended Stories