புதுச்சேரி சுற்றுலா தலங்களுக்கு மட்டுமல்ல, உணவுகளுக்கும் பேமசான ஊர் தான். பல தனித்துவமான உணவுகளை, வித்தியாமான ருசியில் சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்றால் புதுச்சேரி செல்லலாம். புதுச்சேரியில் பிரபலமான பிரெட் குலாப் ஜாமூன், நம்ம வீட்டில் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
புதுச்சேரி, இந்தியாவின் பிரெஞ்சு கலாச்சாரத்துடன் இணைந்த ஓர் அழகிய கடலோர யூனியன் பிரதேசம் ஆகும். இங்கு பலவிதமான உணவுகள் பிரபலமாக உள்ளன. குறிப்பாக பிரெட் குலாப் ஜாமூன். வாயில் வைத்ததுமே கரைந்து போகும். ஒருமுறை சாப்பிட்டால் இன்னும் ருசிக்க வேண்டும் என ஆசையை தூண்டும் இந்த பிரெட் குலாப் ஜாமூனை சுவைக்க புதுச்சேரி வரைக்கும் போக வேண்டியது கிடையாது. இப்போது, இந்த புதுச்சேரி ஸ்பெஷல் பிரெட் குலாப் ஜாமூன் வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
26
பிரெட் குலாப் ஜாமூன் சிறப்பு :
- வழக்கமான குலாப் ஜாமூனுடன் ஒப்பிட்டால், இது தயார் செய்ய எளிதானது.
- பழைய பிரெட்டை பயன்படுத்துவதால் உணவு வீணாகாமல் மீண்டும் பயனளிக்கிறது.
- பால்பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கப்படுவதால் ஒரு இயற்கையான இனிப்பு சுவையை பெறலாம்.
- பத்து நிமிடங்களில் மாவை தயார் செய்து, 20 நிமிடங்களில் பொரித்து இனிப்பு தயாரிக்கலாம்.
36
தேவையான பொருட்கள்:
பழைய பிரெட் - 6 துண்டுகள்
பால்பொடி - 2 டீஸ்பூன்
மைதா - 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்
பால் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
நீர் - 1/2 கப்
எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு
பாதாம், பிஸ்தா - அலங்காரத்திற்காக
- முதலில், பிரெட்டை நன்றாக துண்டுகளாக செய்து, மிக்சியில் கொஞ்சம் நைசாக அரைக்கவும்.
- இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து, பால்பொடி, மைதா, கார்ன்ஃப்ளார், ஏலக்காய் தூள் சேர்த்து, சிறிதளவு பால் விட்டு மென்மையான மண்டையாக பிசையவும்.
- இந்த மாவை சிறிய உருண்டைகளாக செய்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் அல்லது நெய் சூடாக்கி, இந்த உருண்டைகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும்.
- சர்க்கரை, நீர் சேர்த்து சிரப் தயாரிக்கவும். லேசான பதம் வந்தவுடன், இறக்கவும்.
- பொரித்த உருண்டைகளை சூடான சிரப்பில் 30 நிமிடம் ஊற வைத்து, பரிமாறலாம்.
- மேல் அலங்காரமாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவலாம்.
56
சுவையை அதிகரிக்க :
- பிரெட் பொடி மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.
- அதிகமாக பால் சேர்க்காதீர்கள். மாவு லேசாக ஒட்டக்கூடியதாக இருக்க வேண்டும்.
- சர்க்கரைச் சிரப் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
- விரும்பினால், சிரப்பில் சிறிதளவு கோவா சேர்த்து கூடுதல் மென்மையை பெறலாம்.
- நீண்ட நேரம் ஊற விடும்போது, ஜாமூன்கள் முழுமையாக சிரப்பை உள்வாங்கும்.
66
பரிமாறும் முறை :
- சூடாகவும் அல்லது குளிர்வித்தும் பரிமாறலாம்.
- ஒரு கண்ணாடி டப்பாவில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் வரை சேமிக்கலாம்.
- மோர், ஐஸ்கிரீம் அல்லது பாசிப்பருப்பு பாயசத்துடன் இணைத்து பரிமாறலாம்.