30 வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எலும்புகள் பலவீனமடைய வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவும், எலும்பு தேய்மானத்தைத் தவிர்க்கவும் சத்தான பாரம்பரிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
உளுந்து என்றாலே பெண்களுக்குத் தான்! குறிப்பாகத் தோல் நீக்காத கறுப்பு உளுந்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம். வாரத்திற்கு ஒருமுறை உளுந்தங்களி அல்லது உளுந்தங்கஞ்சி சாப்பிடுவது இடுப்பு எலும்பிற்கு அசாத்திய பலத்தைத் தரும்.
210
ராகி எனும் 'அதிசய தானியம்'
தானியங்களிலேயே அதிக கால்சியம் கொண்டது ராகி தான். 30 வயதிற்குப் பின் பாலுக்கு மாற்றாக ராகி அடை அல்லது ராகி கூழ் எடுத்துக்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.
310
பிரண்டை துவையல்
'வஜ்ரவல்லி' என்று அழைக்கப்படும் பிரண்டை, உடைந்த எலும்பைக் கூட ஒட்டவைக்கும் சக்தி கொண்டது. மூட்டு வலி, முதுகு வலியால் அவதிப்படும் பெண்கள் அடிக்கடி பிரண்டை துவையல் சேர்த்துக் கொள்வது அவசியம்.
முருங்கையில் இல்லாத சத்துக்களே இல்லை. இரும்புச்சத்தோடு சேர்த்து இதிலுள்ள அதிகப்படியான கால்சியம், எலும்பு அடர்த்தியை (Bone Density) அதிகரிக்க உதவும்.
510
கொள்ளு ரசம்
கொழுப்பைக் கரைப்பது மட்டுமல்ல, கொள்ளு எலும்புகளுக்கு உறுதி அளிப்பதிலும் கில்லாடி. எலும்புத் துவாரங்கள் ஏற்படாமல் தடுக்க வாரம் இருமுறை கொள்ளு ரசம் அருந்துங்கள்.
610
எள்ளு மிட்டாய்
ஒரு கைப்பிடி எள்ளில் ஒரு கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. கருப்பு எள்ளு மிட்டாய் அல்லது எள்ளு உருண்டை சாப்பிடுவது பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கும் எலும்புக்கும் நல்லது.
710
ஆட்டுக்கால் பாயா
அசைவம் சாப்பிடுபவர் என்றால், ஆட்டுக்கால் சூப் அல்லது பாயா ஒரு சிறந்த மருந்து. இதிலுள்ள கொலாஜன் (Collagen) மற்றும் மினரல்கள் மூட்டுகளில் உள்ள தேய்மானத்தைச் சரிசெய்யும்.
810
பூண்டுப் பால்
இரவில் உறங்குவதற்கு முன் பூண்டுப் பால் குடிப்பது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைக் (Inflammation) குறைக்கும். இது ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணி.
910
பனை வெல்லம் / கருப்பட்டி (Palm Jaggery)
வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு கருப்பட்டிக்கு மாறுங்கள். இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் எலும்பு தேய்மானத்தைத் தாமதப்படுத்தும்.
1010
சூரிய ஒளி குளியல்
என்னதான் சத்தான உணவுகளைச் சாப்பிட்டாலும், வைட்டமின் 'டி' இல்லையெனில் உடல் கால்சியத்தை உறிஞ்சாது. தினமும் காலை 10 மணிக்குள் 15 நிமிடம் உடலில் வெயில் படுமாறு நடப்பது மிக அவசியம்.