ஆண்களே! பூண்டு உங்களுக்கு வரப்பிரசாதம்..ஏன் தெரியுமா?

Published : Oct 19, 2023, 03:52 PM ISTUpdated : Oct 19, 2023, 04:00 PM IST

தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால்  பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு. அது ஏன் தெரியுமா?

PREV
15
ஆண்களே! பூண்டு உங்களுக்கு வரப்பிரசாதம்..ஏன் தெரியுமா?

பூண்டில் எத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதை குறித்து சொல்ல வேண்டிய அவசமில்லை. ஏனெனில், அது பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிந்திருக்கிறோம். பூண்டை சமையலில் பயன்படுத்துவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளை சரி செய்யலாம். பலன்களும் அப்படித்தான். 

25

பூண்டு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பல்வேறு வகையான தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் பூண்டை எடுத்துக்கொள்வதில் தவறுகள் செய்கின்றனர் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். 

35

அல்லிசின் என்பது பச்சை பூண்டில் உள்ள ஒரு வேதிப்பொருள். இது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. பூண்டை சமையலில் பயன்படுத்துவதால் இந்த அல்லிசின் அழிக்கப்படுகிறது. எனவே பூண்டை பச்சையாக எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பூண்டை நேரடியாக உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை சாப்பிடுவதன் மூலம் அவற்றின் முழுப் பலன்களும் நமக்கு கிடைக்கும். 

இதையும் படிங்க:  தினமும் 2 பல் பூண்டு மட்டும் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் உங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!

45

அதுபோல் ஆண்கள் தினமும் பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மேம்படும். பாலியல் திறனும் அதிகரிக்கிறது. கருவுறுதல் பிரச்சனைகள் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:  Garlic Milk: உங்கள் செரிமான பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்க பூண்டு பால் உங்களுக்கு உதவும்..!!

55
ഹൃദയാരോഗ്യം

அதுமட்டுமின்றி பூண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் குறையும். இது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டு சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories