நினைவாற்றல் அதிகரிக்க "இந்த" உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்; மறதி ஒருபோதும் வரவே வராது..!!

Published : Oct 19, 2023, 02:33 PM ISTUpdated : Oct 19, 2023, 02:45 PM IST

சிலருக்கு மறதி அதிகமாகவே இருக்கும். அந்தவகையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சில உணவுகள் உள்ளன. அவற்றை சாப்பிட்டால் உங்களுக்கு மறதியை வராது. அது என்ன உணவுகள் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

PREV
17
நினைவாற்றல் அதிகரிக்க "இந்த" உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்; மறதி ஒருபோதும் வரவே வராது..!!

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று மூளை. மூளையில் உள்ள நரம்பு செல்கள் சரியாக இருந்தால் தான்.. மனிதன் சாதாரணமாக இருக்க முடியும். மூளையில் எந்த செல்கள் சேதமடைந்தாலும், மூளை சரியாக இயங்காது. எனவே எப்போதும் மூளை சுறுசுறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சமச்சீர் உணவு மற்றும் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

27

மூளை ஆரோக்கியமாக இருந்தால் பார்கின்சன் நோய், டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோய்கள் வராது. நாம் உண்ணும் உணவு மூளையை பாதிக்கிறது. எனவே நமது உணவில் சில சூப்பர்ஃபுட்களை சேர்த்துக் கொள்வது மூளையின் நினைவாற்றல் செயல்பாட்டிற்கு உதவும். நினைவாற்றல் சரியாக இருந்தால்தான் எந்தப் பணியிலும் கவனம் அதிகரிக்கும். மூளையின் நினைவாற்றலுக்கு உதவும் உணவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
 

37

வால் நட்ஸ்: வால்நட் மூளையை செயல்படுத்தவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. வால் நட்ஸ் சாப்பிடுவது நியூரான்களுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகிறது. எனவே நினைவாற்றலை அதிகரிக்க வால்நட்ஸை உணவில் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  மோசமான நினைவை மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா? எப்படி கடந்து செல்வது?

47

சாக்லேட்டுகள்: சாக்லேட் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. மில்க் சாக்லேட் அல்லது டார்க் சாக்லேட் மூளையை சரியாக வேலை செய்ய உதவுகிறது. மூளை சுறுசுறுப்பாக இருந்தால்.. செறிவு அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  மூளை ஆரோக்கியம் பெற இந்த மூலிகைகள் ஒரு வரப் பிரசாதம்..!!

 

57
green leafs

பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதால் மூளைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

67

முட்டைகள்: கோழி முட்டை நல்ல ஊட்டச்சத்து உணவு ஆகும். முட்டையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மூளை செல்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் சத்துக்கள் முட்டையில் உள்ளது. எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

வாழைப்பழம் மற்றும் ஆப்பிள்: ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களிலும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது அல்ஜி நோயிலிருந்து பாதுகாக்கிறது. வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் மூளை வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால், மூளை சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories