முள்ளங்கி கிழங்கு வகைகளில் ஒன்று. சுவையில் கொஞ்சம் ஒருவிதமாக இருந்தாலும், இவற்றில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பொட்டாசியம், நார்ச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின்கள் ஏ, பி6, சி, ஈ, கே ஆகியவை அதிகம்.
நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்க முள்ளங்கி உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முள்ளங்கியில் உள்ள அதிக நீர் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் எடை குறைக்க உதவுகிறது.
முள்ளங்கியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் காயங்களை விரைவில் குணமாக்க உதவுகிறது. முள்ளங்கியில் கலோரிகள் குறைவு. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். இது நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: எச்சரிக்கை: முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!!!
முள்ளங்கியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க முள்ளங்கி உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்றால் முள்ளங்கியை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சமீபத்திய ஆய்வுகள் முள்ளங்கி கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் என்று கூறுகின்றன. முள்ளங்கி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பதட்டத்தை குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. முள்ளங்கி சாப்பிடுவதால் முடி தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முடி உதிர்வு குறைந்து, முடி வலுவடையும்.