40 வயதிலும் இளமையாக இருக்க "இந்த" உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!!

Published : Oct 16, 2023, 03:29 PM ISTUpdated : Oct 16, 2023, 03:40 PM IST

வயது கூடக் கூட உடலில் இருக்கும் கொலாஜன் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. எனவே, உங்கள் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைத்தும், சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள கொலாஜன் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

PREV
16
40 வயதிலும் இளமையாக இருக்க "இந்த" உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்..!!

முதுமை என்பது இயற்கையானது. நம் அனைவருடைய வாழ்க்கையிலும் இது நிகழும். வயது கூடக் கூட நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும். அவை நம் சருமத்தில் பிரதிபலிக்கும். உதாரணமாக, சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் சருமத்தில் தெரியும். இவை இயற்கை என்பதால் இவற்றை நம்மால் தடுக்க இயலாது. ஆனால் இவற்றின் அறிகுறிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் தெரியுமா? ஆம் அவற்றைக் கட்டுப்படுத்த சில உணவுகள் உள்ளன அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் வயது முதிர்வுக்கான அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். எனவே, இளமையான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், கொலாஜன் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை..

26

பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளில் வைட்டமி சி நிறைந்துள்ளது. இவை சருமத்தில் உள்ள கொலாஜன் அளவுகளை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இவை சருமத்தில் எற்படும் வறட்சியை நீக்குகிறது மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது.
 

36

பெர்ரிக்கள்: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிக்கள் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அவை முதுமை ஏற்படுவதைத் தாமதப்படுத்துகிறது. எனவே, இவற்றை உங்களில் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் வராது.

இதையும் படிங்க:  முப்பது வயதை கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

46

நட்ஸ் மற்றும் விதைகள்: இவைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. அதுபோல் பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.  இவற்றில் காணப்படும் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

இதையும் படிங்க: என்றும் இளமையாக இருக்க உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்..முதுமை வெகு தொலைவில் இருக்கும்..!! 

56

சிட்ரஸ் பழங்கள்: இவற்றில் வைட்டமின் சி உள்ளது. இவை கொலாஜன் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது. எனவே, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமத்தில் அதிக நன்மைகளைப் பெறலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

பீன்ஸ் மற்றும் பயறு வகைகள்: உங்கள் சருமம் எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள பருப்பு, பச்சை பயிறு, கொண்டைக்கடலை போன்ற பருப்பு மற்றும் பயறு வகைகளை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் இவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவை கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது இதனால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories