இது தெரிந்தால் இனிமேல் நீங்கள் காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!

Published : Mar 12, 2023, 12:38 PM ISTUpdated : Mar 12, 2023, 02:20 PM IST

எண்ணற்ற மருத்துவ பயன்களை தரும் காலிஃபிளவர் இலைகளை சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
13
இது தெரிந்தால் இனிமேல் நீங்கள்  காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!

காலிஃபிளவர் உணவுகளை பலரும் விரும்பி ருசித்து சாப்பிடுவோம். அப்படி காலிஃபிளவர் வாங்கி சுத்தம் செய்ய முதலில் நாம் அதிலுள்ள இலைகளை தான் எடுத்து தூக்கி எரிந்து விடுவோம்.

நாம் வழக்கமாக காலிஃபிளவரில் உள்ள பூக்களை மட்டுமே எடுத்து சமைத்து சாப்பிடுவோம். அதனை சுற்றி உள்ள இலைகளை எடுத்து குப்பையில் வீசி விடுகிறோம்.இன்னும் சிலர் மார்க்கட்டிலேயே அதன் இலைகளை வெட்டி எடுத்து விட்டு தான் வீட்டுக்கு எடுத்து செல்வார்கள்.

ஆனால் இப்படி தூக்கி எறியப்படும் காலிஃபிளவர் இலைகள் காலிஃபிளவர் பூக்களுக்கு இணையான பல்வேறு ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கியதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

இவ்வாறு நாம் வேண்டாம் என்று ஒதுக்கி குப்பையில் தூக்கி எறியும் காலிஃபிளவர் இலைகளில் இருக்கும் ஊட்டச் சத்துக்களின் பயன் பற்றிய அறியாமையால் அதனை நம்மில் பலரும் பயன்படுத்துவது கிடையாது.

ஆகையால் எண்ணற்ற மருத்துவ பயன்களை தரும்காலிஃபிளவர் இலைகளை சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

23

கோவிலில் எதிர் திசையில் எங்கே, எப்போது சுற்ற வேண்டும்? யார் யார் சுற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ப்ரோட்டீன் அண்ட் மினரல்ஸ் :

காலிஃபிளவரில் இருப்பதை விட காலிஃபிளவர் இலைகளில் அதிக அளவிலான ப்ரோட்டீன்கள் காணப்படுகிறது. மேலும் இதில் அதிக அளவிலான மினரல்ஸும் உள்ளது. இவைகள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதனை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தினமும் சமைத்து சாப்பிட தரலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு தருவதால் அவர்களின் எடை,உயரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவில் நல்ல முன்னேற்றம் காணப்படும் .

எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்து:

இதிலுள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதுவுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்திகிறது. தவிர போஸ்ட்மெனோபாஸினால் உண்டாகும் பிரச்னைகளை குறைக்கும் தன்மை கொண்டது.

கண்பார்வையை மேம்படுத்தும் வைட்டமின் ஏ :

இதிலுள்ள வைட்டமின் ஏ கண்ணின் ஆரோக்கியத்தினை பராமரிக்கவும் மேலும் மாலைக்கண் நோய் ஏற்படும் ஆபாயத்தை தடுக்க பயன்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

33

செரிமானத்திற்கு ஏற்ற நார்ச்சத்து :

காலிஃபிளவர் இலைகளில் அதிகமாக காணப்படும் மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து நார்ச்சத்து ஆகும். இந்த நார்சத்து செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. மேலும் இதனை உடல் எடையை குறைக்க விருப்புபவர்கள் இதனைதொடர்ந்து உணவில் எடுத்து வந்தால் உடலை இருக்கும் தேவையற்ற கழிவுகளை உடம்பில் இருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துவதுடன் உடல் உடையை குறைக்கும் பணியை சிறக்க செய்கிறது.

பல்வேறு நோய்களை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் :

உடலின் ஆரோக்கியத்தினை பராமரிக்க ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும் . இவை ஆக்ஸிஜனேற்றிகளாக செய்ல்பட்டு உடலில் இருக்கும் மாசுக்களை அகற்றி பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்கும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories