சண்டே ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "பன்னீர் மஞ்சுரியன்"!

First Published | Mar 12, 2023, 10:20 AM IST

இன்று நாம் பன்னீர் வைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் மஞ்சுரியன் ரெசிபியை வீட்டில் எப்படி ஈஸியாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

Paneer Pepper Fry

பன்னீர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. பன்னீர் வைத்து செய்யப்படும் அனைத்து ரெசிபிகளும் அட்டகாசமான சுவையில் இருக்கும். பன்னீர் வைத்து டிக்கா, மசாலா, கிரேவி, 65, ஃப்ரைட் ரைஸ்,பிரியாணி என்று பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம்.

அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் மஞ்சுரியன் ரெசிபியை வீட்டில் எப்படி ஈஸியாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர்- 200 கிராம்
வெங்காயம்-1
கேப்ஸிகம் -1
ஸ்ப்ரிங் ஆனியன்-கையளவு
மைதா மாவு-1 கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
லெமன்-1/2 பழம்
பூண்டு-4 பற்கள்
சோயா சாஸ்-1 ஸ்பூன்
வினிகர்-2 ஸ்பூன்
டொமெட்டோ சாஸ்-2 ஸ்பூன்
மிளகுத் தூள்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

இந்த சம்மரில் குளுகுளுவென சாப்பிட பெஸ்ட் சாய்ஸ்-"தர்பூசணி ஐஸ்க்ரீம்"

செய்முறை:

முதலில் பன்னீரை ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம்,கேப்ஸிகம், ஸ்ப்ரிங் ஆனியன் ,பச்சை மிளகாய், மற்றும் பூண்டு ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி சாறு பிழிந்து தனியாக வைத்துக் கொள்ள வேனுடம்.

இப்போது ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கார்ன் பிளார்,உப்பு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கட்டி தட்டாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த மாவினில் வெட்டி வைத்துள்ள பன்னீர் சேர்த்து கோட் செய்து சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும்.

Latest Videos


அடுப்பில் 1 பான் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்த பின் அதில் பன்னீர் துண்டுகளை மாவில் இருந்து எடுத்து எண்ணெய்யில் சேர்த்து தீயினை மிதமாக வைத்து விட வேண்டும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்த பிறகு,அதனை பன்னீரை எடுத்து தட்டில் டிஸ்யூ பேப்ர் மீது வைத்து எண்ணெய்யை வடிக்க செய்ய வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி ,காய்ந்த பின்னர் சீரகம் சேர்த்து தாளித்து பின் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கேப்ஸிகம் சேர்த்து வதக்கி சிறிது உப்பு தூவி கிளறி விட வேண்டும். இப்போது டொமேட்டோ சாஸ், சோயா சாஸ், வினிகர் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நிமிடன வரை உயர் தீயில் வைத்து வதக்கி விட வேண்டும்.

இப்போது பொரித்து வைத்துள்ள பன்னீரை அதனை நன்கு மசாலாவுடன் சேரும் வரை பக்குவமாக கிளறி விட வேண்டும். பின் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி விட்டு இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறினால் சூப்பரான பன்னீர் மஞ்சுரியன் ரெடி!

click me!