ஸ்டைலாக பதப்படுத்தப்பட்ட உணவை உண்ண மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் காலையில் வாழைப்பழம் சாப்பிட சிரமப்படுகிறார்கள். அசிடிட்டியை தவிர்க்க தினமும் எழுந்ததும் வாழைப்பழத்தை சாப்பிடுவது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகிறது. இதன் அறிகுறியாக வயிற்றுப் பிடிப்புகள், சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்றவை உண்டாகிறது.
Image: Getty Images
அசிடிட்டிக்கு பை! பை!
அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க அதிகாலையில் வாழைப்பழம் உண்பது ஏற்றது என ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வாழைப்பழம் அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு என அவர் தெரிவிக்கிறார். இது அமிலத்தன்மை குறைவாக உள்ள பழம் என்பதால் அசிடிட்டி உள்ளவர்களுக்கு ஏற்றது.
உடல் எடையை குறைக்கும்!
நார்ச்சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை உண்பதால் நீண்ட நேரம் பசி தாங்க முடியும். ஆகவே உடல் பருமன், அதிக எடையை கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பொட்டாசியம் இதில் அதிகம் காணப்படுகிறது. அதனால் தினமும் சாப்பிடலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் ஒழியும்!
நாள்தோறும் வாழைப்பழம் உண்பதால் கெட்ட கொழுப்புச்சத்து அதிகரிக்காது. இதில் பெக்டின், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. உடலில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து அளவை பராமரிக்க வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். தவறாமல் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் அன்று உள்ளம் மகிழும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்