அசைவ பிரியர்களுக்கு மீன் தான் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். மீனை வடிவாக நறுக்கி மஞ்சள் தூள், உப்பு, புளி ஆகியவை சேர்த்து சமைத்து ருசித்தால் மீனை பிடிக்காது என்று சொல்பவர்களே இருக்கமாட்டார்கள். கடலோர மக்களுக்கு மீன் அடிக்கடி கிடைக்கக் கூடிய விருப்ப உணவு என்றாலும், கடல் இல்லாத நகரங்களில் உள்ளவர்கள் அதிக விலை கொடுத்தும் மீன் வாங்க தயாராக இருக்கிறார்கள்.
நம் ஊர்களில் மீன்களின் விலை பொதுவாக ஆயிரங்களில் தான் இருக்கும். அதற்கே நம்மூர் ஆட்கள் பேரம் பேசி அடம்பிடிப்பார்கள். ஆனால் ஜப்பானில் புளுபின் டுனா (bluefin tuna) என்ற மீன் விலை 2 கோடி ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை. அதன் காரணம் குறித்து இங்கு காணலாம்.
இந்த விலையுர்ந்த புளுபின் டுனா மீன், ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள துஸ்கிஜி மீன் சந்தையில் விற்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உயர்தர சுஷி உணவகங்களில் புளுபின் டுனா சிறப்பு உணவாக கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு விடப்பட்ட முதல் ஏலத்தில் புளுபின் டுனா மீன் ரூ.2 கோடிக்கு அதிகமாக விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட இருமடங்காகும்.
இதையும் படிங்க; Pongal 2023: பொங்கலில் சூரிய பகவானை ஏன் வழிபடுகிறார்கள்? என்னென்ன நன்மைகள் தெரியுமா?
புளுபின் டுனா ஏன் அதிக விலைக்கு விற்கிறது?
புளுபின் டுனாவில் பசிபிக் புளுபின் டுனா, அட்லாண்டிக் புளுபின் டுனா ஆகிய இரண்டு வகைகள் உள்ளன. இவை அளவில் பெரியவை. நான்கு மீட்டர் அளவுக்கு பெரியதாகவும், 600 கிலோ எடையுடனும் இருக்கும். குளிர்காலத்தில் கொழுப்பை சேமிக்கும் திறன் இவற்றிற்கு உண்டு. இந்த மீன்கள் வளர் பருவத்தில் மெஜி அல்லது 'யோகோவா' என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மீன்கள் விற்பனையாகும்போது மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்டு விற்கப்படுகின்றன. அப்போதுதான் இதற்கு புளுபின் என்று பெயரிடப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டுகள் பிரபலமாக வேண்டும் என இவற்றை அதிக ஏலத்தில் விலைக்கு வாங்குகின்றன.
இதையும் படிங்க; Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்
குப்பை மீன்
1970 ஆண்டு வரை இந்த மீன், குப்பை மீன் என அழைக்கப்பட்டது. பீப் எனும் மாட்டிறைச்சி பிரபலமாக வந்த பின்னர் புளுபின் டுனா மக்களிடையே நல்ல பெயர் பெற்றது. ஜப்பான் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் காலங்களில் ஜப்பானுக்கு திரும்பும் சரக்கு விமானங்கள் மலிவான டுனாவை வாங்கி அதிக விலைக்கு விற்க ஆரம்பித்தன.