புதுசா சமைப்பவரா நீங்கள்? கிட்சன்ல கட்டாயம் இருக்க வேண்டிய பொருள்கள் லிஸ்ட் இதோ!

First Published | Jan 5, 2023, 5:49 PM IST

புதியதாக சமையல் செய்பவர்களுக்கு எந்தெந்த பொருள்கள் முக்கியமானவை என்பதில் குழப்பம் இருக்கும். முக்கியமான மசாலா பொருள்களை குறித்து இங்கு காணலாம். 

சமையல் செய்யும்போது மனம் இளகுவாக இருக்கும். அதுவும் நாமே சமைத்து பரிமாறும்போது அதை சாப்பிட்டுவிட்டு பாராட்டினால் சந்தோஷம் பொங்கும். ஒரு நாள் சமைத்து பார்க்கலாமே என தொடங்குபவர்கள் கூட தொடர்ந்து சமைக்க அதுதான் காரணம். ஆனால் புதிதாக சமைக்க தொடங்கும்போது வீட்டில் எந்தெந்த பொருள்களை எப்போது இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது. முக்கியமான மசாலா பொருள்கள் சிலவற்றை இங்கு காணலாம். 

Image: Getty Images

இலவங்கப்பட்டை 

குழம்பு, கிரேவி, பிரியாணி, புலாவ் என அனைத்து வகையான உணவுகளிலும் இடம் பெறும் மசாலா பொருள் தான் இலவங்கப்பட்டை. இதனை எப்போது ஸ்டாக் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். மாசாலா டீ செய்ய கூட இது அத்தியாவசியமாக தேவைப்படும். 

Tap to resize

மஞ்சள் பொடி 

உணவுக்கு நிறமூட்டியாக பயன்படும் மஞ்சள் பல மருத்துவ பலன்களையும் கொண்டுள்ளது. 

வெந்தய விதைகள் 

வெந்தயம் உணவில் நல்ல வாசனையை கொடுக்கும். இது உடலுக்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தும். 

பெருஞ்சீரகம் 

உணவில் வாசனையும், சுவையும் கூட்டும் வல்லமை பெருஞ்சீரகத்திற்கு உண்டு.

கொத்தமல்லி இலை 

கொத்தமல்லி இலையை வாசனைக்காக உணவில் சேர்ப்பர். சாம்பார் போன்ற சைவ உணவிலும், பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளிலும் கொத்தமல்லி இலை நல்ல வாசனையை கொடுக்கும். உணவு பொருள்களை அழகாக பரிமாறவும் இது பயன்படும். 

இதையும் படிங்க; உங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக பீரோல இந்த நாணயங்களை வைச்சிக்கோங்க.. அப்புறம் காசுக்கு பஞ்சமே இருக்காது!

குங்குமப்பூ 

உணவில் நிறத்தை ஏற்படுத்த குங்குமப்பூவை பயன்படுத்தலாம். இது 2கி குறைவாக பயன்படுத்துவதுதான் உடலுக்கு நல்லது. 

கிராம்பு 

அசைவ உணவில் காரத்தை கூட்ட உதவுகிறது. கிராம்புவின் சிறப்பே இது உணவில் காரத்தை அதிகரிக்கும். 

சிவப்பு மிளகாய் தூள் 

இந்திய உணவு வகைகளின் சிறப்பே அவை காரமாக இருப்பதுதான். எந்த உணவிலும் காரம் இல்லாமல் இந்தியர்கள் உண்பதில்லை. எல்லா சமையலறையிலும் சிவப்பு மிளகாய் தூள் கட்டாயம் இடம்பிடிக்கும் 

ஏலக்காய் 

மசாலா டீ முதல் பிரியாணி வரை வாசனைக்காக பயன்படுத்தப்படுவது ஏலக்காய் தான். பாயசம் போன்ற இனிப்பு வகைகள் ஏலக்காய் வாசனை இல்லாமல் முழுமை பெறாது. 

புதியதாக சமையலறையில் நுழைந்திருப்பவர்கள் என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதை முதலில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் பொருள் தீர்ந்து போகிறது எனில் அதை முன்கூட்டியே குறித்து வைத்து வாங்கி வைத்து கொள்ளுங்கள். அதுவும் நல்ல சமையல்காரருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

Latest Videos

click me!