கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அப்பாவாக முடியாதாம்.. ஆண்களே கவனம்!

First Published | Jan 2, 2023, 5:59 PM IST

நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் பல நோய்கள் வரக்கூடும். கெட்ட கொழுப்பை சைலண்ட் கில்லர் என அழைக்கிறார்கள்.  

இதயத்தில் உள்ள தமனிகளில் கெட்ட கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவு அதிகமானால் சில சமயங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும். நமது உடலில் இருவகையான கொழுப்பு புரதங்கள் உள்ளன. உயர் அடர்த்தி புரதங்கள் தீங்கு விளைவிக்காதவை என்றும், குறை அடர்த்தி புரதங்கள் தீங்கு விளைவிப்பவை என்றும் கூறப்படுகிறது. கெட்ட கொழுப்பு பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் நம் உயிரை எடுக்கிறது. போதுமான உடற்பயிற்சியின்மை, உணவில் கவனம் கொள்ளாமல் கண்ட உணவுகளையும் எடுத்து கொள்ளுதல் நம் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். இது இதயத்திற்கு ரத்தத்தை அனுப்பும் தமனிகளை குறுக்குகிறது. இதனால் ரத்தம் செல்வதில் சிக்கல் உண்டாகி இதய நோய்க்கு வழி வகுக்கிறது. 

இதையும் படிங்க; மாரடைப்பு வராது! வறுத்த கடலையும் வெல்லமும் தரும் நன்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க!

என்னென்ன காரணங்களால் கொழுப்பு அதிகமாகும்? 

மோசமான உணவு பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை, குறைவான உடல் இயக்கம்,மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகிய பழக்கங்களால் கெட்ட கொழுப்பு அதிகமாக உருவாகும். 

Tap to resize

இதய நோய் 

இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அதிகமான கொழுப்பு சேரும்போது இதய நோய் உண்டாகும். உடல் ரத்த ஓட்டம் குறைவாக ஆகி மாரடைப்பு, வலிப்பு போன்ற நோய்களுக்கும் கெட்ட கொழுப்பு காரணமாக அமைகிறது. தமனிகளை குறுக்கி இதய நோயை உண்டாக்குதலை அதிரோஸ்கிளிரோசிஸ் என அழைக்கிறார்கள். தமனிகள் குறுகுவதால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. போதுமான ஆக்சிஜனும் கிடைக்காது. இதுவே மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. ரத்த உறைவு ஏற்படவும் காரணமாகக் கூடும். 

பக்கவாதம்

கெட்ட கொழுப்பு உடலில் அதிகம் காணப்பட்டால் பக்கவாதத்திற்கு வாய்ப்பாக அமையும். கெட்ட கொழுப்பு இதயத்திற்கு ரத்தம், ஆக்ஸிஜன் செல்வதை தடுப்பது மட்டுமின்றி மூளைக்குச் செல்லும் தமனிகளையும் கூட தடுக்கிறது. இதுவே பக்கவாதம் ஏற்பட காரணமாக அமைகிறது. சிலருக்கு மூளை காய்ச்சல் ஏற்படு மரணம் கூட உண்டாகுகிறது. 

ஆண்மை குறைபாடு

எல்லாவற்றிலும் அவசரம் கொள்ளும் இளைஞர்கள் இந்த நூற்றாண்டில் பெருகிவிட்டனர். அவர்கள் உணவு முறையில் ஆரோக்கியமான உணவுகளை விடவும் துரித உணவுகளுக்கே முதன்மை இடம் கொடுக்கப்படுகிறது. அதனால் பல உடல் நலக் குறைபாடுகளை சந்திக்கின்றனர். கெட்ட கொழுப்பு அதிகமாக காணப்படும் சில இளைஞர்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.

இது ஆண்மை குறைப்பாட்டை உண்டாக்கி தந்தையாகும் வாய்ப்பை குறைக்கிறது. கெட்ட கொழுப்புக்கும், ஆண்மை குறைபாட்டிற்கும் தொடர்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கெட்ட கொழுப்பு உள்ள விலங்குகளுக்கு விந்தணு வீரியம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை தொடருங்கள். 

இதையும் படிங்க; Mint water: ஜொலிக்கும் சருமம்! அதிகாலையில் புதினா வாட்டர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

Latest Videos

click me!