சிறுநீரகத்துல பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தவறாம எடுத்துக்கோங்க!

Published : Jan 04, 2023, 10:08 AM IST

நம் உடலின் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு எல்லா உள்ளுறுப்புகளும் சரியாக இயங்குவது அவசியம்.   

PREV
17
 சிறுநீரகத்துல பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தவறாம எடுத்துக்கோங்க!

நம்முடைய உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகங்கள் தான். அவை நலமாக இருந்தால் உடல் முழுக்க ஆரோக்கியமாக இருக்கும். ஒரு வாகனத்திற்கு எஞ்ஜின் போல நமக்கு சிறுநீரகம் செயல்படுகிறது. நம் உடலில் உள்ள கழிவுகளை திரவமாக வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவையே ஹார்மோன்களையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. 

27

 

சிறுநீரகம் எப்போது சுணங்கி போகிறதோ சரியான இயக்கம் இல்லையோ அப்போது ஏதோ நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்பட்டாகும், உணவில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் பாதிப்புகள் உண்டாகலாம். உடலில் உள்ள பி.எச் அளவை சீராக வைப்பதும், பொட்டாசியம் அளவை கட்டுப்படுத்துவதும் சிறுநீரகம் தான். சிறுநீரகம் சரியாக இயங்காவிட்டால் உடலில் கழிவுகள் தேங்கி நச்சுகள் அதிகமாகும். இது மற்ற பல நோய்களுக்கு காரணமாகும். உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் சிறுநீரக நோய்களால் அவதிபடுகின்றனர். சிறுநீரக நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். சில உணவுகள் சிறுநீரகத்தில் கல் இருப்பதால் உண்டாகும் வலியை குறைக்க உதவும். 

37

சிவப்பு மிளகாய்

சிவப்பு குடை மிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. அதே சமயம் வைட்டமின் சி, ஏ, பி6 ஆகியவை அதிகமாகவும், போலிக் அசிட், நார்ச்சத்து மிகுந்தும் காணப்படுகிறது. இதனை உண்ணும் போது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. 

47

பூண்டு 

சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு உப்பு மாற்றாக பூண்டு பல ஊட்டச்சத்து நன்மைகளை வாரி வழங்குகிறது. மாங்கனீசு, வைட்டமின் சி, பி6 ஆகியவை அதிகம் காணப்படும் பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. உடலின் வெப்பத்தையும் இது அதிகரிக்கும். வாயு பிரச்சனைகளுக்கும் பூண்டை பயன்படுத்துவர். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

 

57

வெங்காயம் 

எல்லா சமையலிலும் முன்னோடியாக காணப்படும் வெங்காயம் சிறுநீரகத்திற்கு ஏற்றது. உப்பில்லாத உணவின் சுவையை அதிகரிக்கும் வல்லமை கொண்ட வெங்காயம் காரத்தை வெகுவாகக் குறைக்கும். இதனால் உணவுகளின் சுவை குறையாது. வெங்காயத்தை பூண்டு, ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து வதக்கி உண்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.  

67

ஆப்பிள் 

பொட்டாசியம், பாஸ்பரஸ் சோடியம் ஆகியவை ஆப்பிளில் குறைவாகவே இருக்கிறது. இவற்றை சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவுகளாக குறிப்பிட அதுவே காரணம். நாள்தோறும் அல்லது வாரத்திற்கு 3 முறையாவது ஆப்பிள் எடுத்து கொள்ளலாம். 

77

காலிபிளவர் 

இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. போலேட், நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் செரிமானத்திற்கு ஏற்றது. காலிபிளவரில் உள்ள இண்டோல்ஸ், குளுக்கோசினோலேட்டுகள், தியோசயனேட்டுகள் சேர்ந்த கலவைகள் உயிரணு சவ்வுகள், டிஎன்ஏவை சேதப்படுத்தும் நச்சுகளை நடுநிலையாக்க கல்லீரலுக்கு உதவுகின்றன. 

 

Read more Photos on
click me!

Recommended Stories