கோழிக்கறியை கழுவினால் பாக்டீரியா பரவுமா?

First Published | Jan 9, 2023, 12:42 PM IST

கோழிக்கறியை வாங்கி வந்ததும் சுத்தம் செய்வதற்காக பலமுறை கழுவுவதே பாக்டீரியா பரவ காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

காய்கறிகளை கழுவுவதை விட அசைவ உணவுகளை கழுவும் முன்பு நாம் அதிக மெனக்கெடுவோம். இறைச்சியில் இருக்கும் ரத்தம், கிருமி உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதை செய்கிறோம். ஆனால் கோழிக்கறியை சமைக்கும் அறையில் வைத்தே கழுவக் கூடாதாம். அப்படி கழுவினால் பாக்டீரியா சமையலறையில் உள்ள மற்ற பொருள்களின் மீது தண்ணீர் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் கோழிக்கறியை சுத்தம் செய்வதே அதில் இருக்கும் கிருமிகளை போக்கத்தான். ஆனால் பல முறை கழுவினாலும் கூட பாக்டீரியாக்களையோ, நுண்கிருமிகளையோ ஒழிக்க முடியாது. அவை வெப்பத்தில் தான் செயலிழக்கும். இதை அறியாமல் நாம் பல முறை கோழிக்கறியை கழுவும்போது சுற்றியுள்ள பொருள்களின் மீது இந்த நுண்கிருமிகள் படிந்துவிடும் வாய்ப்புள்ளது. இதை கவனிக்காமல் அந்தப் பொருள்களை நாம் பயன்படுத்தும்போது கிருமிகள் பரவலாம். இதனால் பரவும் நோய்கள் சமீபமாக அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


பாத்திரத்தில் உள்ள நீரில் பலமுறை அலசுவது தவறு என்பது போலவே, குழாயில் நீரை திறந்துவிட்டு கறியை கழுவுவதும் தவறுதான். சிலர் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் ஊற்றி கறியை சுத்தம் செய்கிறார்கள். அதுவும் தவறுதான் என்கின்றனர் நிபுணர்கள். 

இப்படி எல்லா முறையும் தவறு என்று கூறிவிட்டால் எப்படிதான் கழுவுவது என்ற கேள்வி எழுகிறதா? கவனமாக பாத்திரத்தில் கறியை எடுத்து தண்ணீர் ஊற்றிவிடுங்கள். தண்ணீர் எங்கும் சிந்தாமல், இருமுறை அலசினால் போதும். சிங்கில் வேறு பாத்திரம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். கழுவி முடித்ததும் ஒரு காகிதம் கொண்டு சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். சிங்கை ஒருமுறை கழுவி விடுங்கள். துணியை பயன்படுத்தினால் அதை துவைக்காமல் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அதுவே பாக்டீரியாவை பரவாமல் தடுக்கும். 

இதையும் படிங்க; சீக்கிரம் கேஸ் தீர்ந்து போகிறதா? இந்த காரணமா இருக்கலாம் செக் பண்ணுங்க!

Latest Videos

click me!