கத்தரிக்காய் இல்லாத சைவ உணவுகள் வெகு குறைவு. அசைவ உணவுகளில் கத்தரிக்காய் போட்ட கருவாட்டு குழம்பு மிகுந்த சுவையுடன் இருக்கும். சாம்பார், பொரியல், தொக்கு என அனைத்து வகை உணவுகளிலும் கத்தரிக்காய் பிரதானம். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, கால்சியம், மாங்கனிசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனாலும் சிலர் கத்தரிக்காவை எடுத்து கொள்ளும்போது உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது குறித்து இங்கு காணலாம்.