சில எவ்வளவு தான் பார்த்து பார்த்து கலோரி குறைவான உணவுகள், கடுமையான டயட் பின்பற்றினாலும் உடல் எடை மட்டும் குறையாமலேயே இருக்கும். என்ன செய்தாலும் எடை குறையாமல் இருப்பதற்கு மருத்துவ ரீதியாக சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. "கலோரி குறைவான உணவைத்தான் சாப்பிடுகிறேன், ஆனால் எடை மட்டும் குறையவே மாட்டேன் என்கிறது" என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். இந்த கேள்விக்கான பதிலை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
"உடல் எடை குறைப்பு என்பது வெறும் கலோரி கணக்கீடுகளை விடவும் பல காரணிகளை உள்ளடக்கியது" . "நாம் உண்ணும் உணவின் அளவு, அதன் தரம், நமது வாழ்க்கை முறை, தூக்கம், மன அழுத்தம், மற்றும் ஆரோக்கிய நிலையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன." என்கிறார்கள்.
29
உணவுத் தேர்வு :
"கலோரிகளை குறைப்பது மட்டும் போதாது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம்" உதாரணமாக, 100 கலோரிகள் கொண்ட ஒரு சாக்லேட் பாருக்கும், 100 கலோரிகள் கொண்ட பழங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. சாக்லேட்டில் அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இருக்கும். இது பசியை விரைவில் தூண்டி, மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால் பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. அவை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். மேலும், அவை வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களையும் வழங்கும்.
குறைவான கலோரிகள் கொண்ட உணவு என்ற பெயரில், சத்தான உணவுகளைத் தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது உடல் எடை குறைப்பைத் தடுக்கும்.
39
மறைமுக கலோரிகள் :
சில உணவுகளில் மறைமுகமாக அதிக கலோரிகள் ஒளிந்திருக்கும். உதாரணமாக, சாலட் டிரஸ்ஸிங், காபி மற்றும் டீயில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் பால், சில ஜூஸ்கள் போன்றவற்றில் அதிக கலோரிகள் இருக்கலாம். இந்த மறைமுகமான கலோரிகளை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இதுவும் உடல் எடை குறையாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
கலோரி குறைவான உணவை உண்பதுடன், உடல் உழைப்பும் மிக அவசியம். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா அல்லது வேறு ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கலோரிகளை எரிக்கவும், தசைகளை உருவாக்கவும் உதவும். தசைகள் அதிக கலோரிகளை எரிக்கின்றன. எனவே, உடல் உழைப்பு இல்லாமல் கலோரி குறைவான உணவை மட்டும் நம்பி இருந்தால் எடை குறைப்பது கடினம்
59
தூக்கமின்மை
போதுமான தூக்கம் இல்லாதது ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, பசியை அதிகரிக்கும் ஹார்மோன்களைத் தூண்டும். இதனால் அதிகமாக சாப்பிடத் தோன்றும். தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது உடல் எடை கட்டுப்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
69
மன அழுத்தம் :
மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, குறிப்பாக கார்டிசால் என்ற ஹார்மோனை அதிகரித்து, உடலில் கொழுப்பை சேமிக்க வழிவகுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம், அல்லது பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது பயனுள்ளதாக இருக்கும்.
79
மருத்துவ காரணங்கள் :
தைராய்டு பிரச்சனைகள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற மருத்துவ காரணங்களாலும் உடல் எடை குறையாமல் இருக்கலாம். உங்களுக்கு மேற்கண்ட காரணங்கள் எதுவும் இல்லை எனில், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நிலையை பரிசோதிப்பது நல்லது.
89
தவறான எடை குறைப்பு எதிர்பார்ப்புகள் :
சிலர் மிக விரைவாக எடை குறைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். உடல் எடை குறைப்பு என்பது ஒரு படிப்படியான செயல். ஒரே நாளில் மாயாஜாலம் போல எடை குறைந்துவிடாது. யதார்த்தமான இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியம். வாரத்திற்கு 0.5 கிலோ முதல் 1 கிலோ வரை எடை குறைப்பது ஒரு ஆரோக்கியமான இலக்காகும்.
99
மழைக்கால சிறப்பு குறிப்பு:
தற்போது மழைக்காலம் என்பதால், பலருக்கும் சூடான, வறுத்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளில் கலோரிகள் அதிகம். மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க, சூடான, சத்தான சூப், காய்கறி சாலட் போன்றவற்றை உட்கொள்ளலாம். மழைக்காலத்தில் உடல் உழைப்பு சற்றுக் குறைவாக இருக்கும் என்பதால், உணவில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.