ஆய்வில் தகவல் :
அண்மையில் 65 முதல் 80 வயதுக்குட்பட்ட 585 முதியோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களுடைய தூக்கம், உடல் செயல்பாடு, 24 மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருக்கும் நடத்தை ஆகியவை கவனிக்கப்பட்டது. இது அவர்களின் அறிவாற்றல் செயல்திறனுடன் ஒப்பிடப்பட்டது. இதில் தினமும் உடற்பயிற்சி செய்தவர்கள் சிறந்த மூளை ஆரோக்கியம் கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில விஷயங்களை ஆராய்ந்தபோது, சுறுசுறுப்பான நடைபயிற்சி கவனிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.