உடலை ஃபிட்டாக வைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு 70 வயதிற்கு மேல் இருக்கிறவர்கள் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடைபயிற்சி என்பது இளையோர் முதல் முதியவர் வரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கியமான உடற்பயிற்சி ஆகும். அதிலும் குறிப்பாக 70 வயதிற்கு மேற்பட்டோர் தினமும் நடப்பது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்ல மாற்றங்களை கொடுக்கும். பொதுவாக முதுமை அடையும் போது மக்களின் வாழ்க்கை முறை மாறுபடும். மேலும் நோயற்ற வாழ்க்கை முறைக்கு உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருப்பது ரொம்பவே முக்கியம். எனவே முதுமை சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க நடை பயிற்சி தான் சிறந்த தேர்வாக இருக்கும்.
26
70 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும்?
இது உங்களது உடல் அமைப்பை பொறுத்தது. அதாவது நீங்கள் எந்த நோயும் இல்லாமல் உடல் ரீதியாக ஆரோக்கியமாகவும், 30 முதல் 45 நிமிடங்கள் மெதுவான வேகத்தில் நடக்க வேண்டும். 3000 முதல் 5000 அடிகள் வரை இருக்கும். ஆனால், முதலில் நீங்கள் 10 முதல் 15 நிமிடங்கள் தொடங்கி பிறகு படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நடக்கும் போது வயிற்றில் லேசான உணர்வு ஏற்படுவதை குறைந்தது ஒரு மணி நேரம் இடைவெளி அல்லது மேல் எடுத்துக் கொள்ளுங்கள்.
36
வயதானவர்களுக்கு நடைபயிற்சி ஏன் சவாலானது?
வயதாகும் போது உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும். இது வாக்கிங் செல்வதை மிகவும் கடினமாக்கும். தசை பலவீனம், மூட்டு விறைப்பு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வயதாகும்போது வருவது பொதுவானது. இது அவர்களின் உடல் இயக்க வரம்பை சகிப்புத்தன்மையை குறைக்கும். இந்த காரணத்திற்காக தான் முதியோர்களுக்கு சவாலானதாகிறது.
முதல் வயதில் நடப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது எலும்புகள் வலுவாக இருக்கும், ஆஸ்திரியோபெரோசிஸ் அபாயம் குறையும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், இதய நோய்கள் அபாயத்தை குறைக்கும் போன்றவை இதில் அடங்கும்.
56
70 வயதிற்கு மேல் நடக்கும்போது கவனிக்க வேண்டியவை :
- மெதுவாக அல்லது மிதமான வேகத்தில் நடக்க வேண்டும்.
- நடக்க வசதியான ஆடைகள் மற்றும் காலணிகளை அணிய வேண்டும்.
- முதிர்வயதில் காலை அல்லது மாலையில் நடப்பது நல்லது.
- கழிவுகள் மற்றும் தூசு இல்லாத இடத்தில் நடப்பது ரொம்பவே நல்லது.
- மலை மற்றும் கடுமையான வெயில் போன்ற நேரங்களில் நடப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு லேசான உடற்பயிற்சி செய்யலாம்.
- நடப்பதற்கு முன் போதுமான அளவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
66
வாக்கிங் போகும் போது செய்ய வேண்டியவை:
உடம்பை நேராக வைத்து நடக்க வேண்டும்.
கைகளில் லேசாக அசைத்து நடக்க வேண்டும்.
கண்களை நீராக வைத்து நடக்க வேண்டும்.
முதுகு மற்றும் கைகளை நேராக வைத்து நடக்க வேண்டும்.
குறிப்பு : 70 வயதை தாண்டிய பிறகு வாக்கிங் செல்வது உடலுக்கு மன்றத்திற்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. ஆனால் நடக்கும் முன் கண்டிப்பாக ஒரு முறை மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி நடப்பது மிகவும் நல்லது.