உங்களுடைய வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றக் கூடிய சிறந்த பழக்கங்களில் ஒன்றுதான் நடைப்பயிற்சி. இது உடல் எடையை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல் சர்க்கரை வியாதி இதய நோய்கள் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. உடலை ஆரோக்கியமாக பேண பத்தாயிரம் காலணிகள் நடக்க வேண்டும் என பல தரப்பினரும் கூறும் நிலையில் அனைவராலும் இந்த இலக்கை அடைய முடிவதில்லை. இந்த பதிவில் உண்மையில் ஒருவர் ஒரு நாளுக்கு எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
25
மன ஆரோக்கியம்;
நீங்கள் உங்களுடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி மேற்கொண்டால் தினமும் 5000 காலடிகள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது உங்களுடைய மனசோர்வை குறைத்து மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
35
மனச்சோர்வு நீங்க!
எதிலும் திருப்தி இல்லாமல் மனச்சோர்வுடன் காணப்படுபவர்கள் தினமும் 7000 காலடிகள் நடப்பது அவர்களுடைய மனச்சோர்வை குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் 7,200 காலடிகள் நடந்தால் இதய நோய் அபாயத்தை 51% குறையும் வாய்ப்புள்ளது.
இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் நினைப்பவர்கள் நாள்தோறும் 2,800 காலடிகள் நடக்க வேண்டும். இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன.
55
நீண்ட ஆயுள்;
நாள்தோறும் 2,600 காலடிகள் நடந்தால் எல்லா காரணங்களாலும் ஏற்படக் கூடிய இறப்பு அபாயம் 8% குறைகிறது. தினமும் 8,800 காலடிகள் என்பது இறப்பு அபாயத்தை 60% குறைக்கிறது.