எடையை குறைக்கும் 12-3-30 வாக்கிங் முறை தெரியுமா?

Published : Jun 02, 2025, 08:48 AM IST

உடல் எடையைக் குறைக்கும் எளிய முறையான 12-3-30 வாக்கிங் முறை பற்றி இங்கு காணலாம்.

PREV
14
Details on 12-3-30 Walking Method

உடல் எடையைக் குறைக்க மக்கள் பல விஷயங்களை முயற்சி செய்கிறார்கள். அதில் பரவலாக பலர் பின்பற்றுவது நடைபயிற்சிதான். இந்தப் பதிவில் 12-3-30 நடைப்பயிற்சி முறை மூலம் எப்படி எடையை குறைக்கலாம் என காணலாம்.

24
12-3-30 வாக்கிங் முறை;

நேரான பாதையில் நடப்பதை விட சாய்வான பாதையில் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது கூடுதல் நன்மைகள் தரும். பொதுவாக இந்த முறையில் சாய்வாக நடக்க வேண்டும். ஆரம்பத்தில் டிரெட்மில்லில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்கலாம். "12 டிகிரி சாய்வில் மணிக்கு 3 மைல் வேகத்தில் 30 நிமிடங்கள் தொடர்ந்து நடந்தால் போதும். இதையே 12-3-30 வாக்கிங் முறை என்கிறார்கள்.

34
மாற்று வழிமுறை:

டிரெட்மில் இல்லாதவர்கள் சாய்வான பகுதியில் விறுவிறுப்பான நடைபயிற்சி செய்யலாம். நேராக நடக்காமல் சாய்வான மேட்டில் ஏறி இறக்கலாம். படிக்கட்டுகளில் குறிப்பிட்ட நிமிடங்கள் நடப்பது சிறந்தது.

44
நன்மைகள்:

சாய்வாக நடப்பதால் கால், கீழ் உடல் தசைகள் வலுவாகும். இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் எடையை குறைப்பதோடு மனநிலையை சீராக்கி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories