வாக்கிங் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? உண்மை தகவல்கள் இதோ!!

Published : May 30, 2025, 08:47 AM IST

வாக்கிங் செல்வதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருமா என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

PREV
15

Is It True That Walking Can Help Control High Blood Pressure : வாக்கிங் செல்வது உடலை மட்டுமல்ல மனதையும் இலகுவாக்கக் கூடிய பயிற்சியாகும். இதற்கென தனி உபகரணங்கள் தேவையில்லை. எங்கும் எப்போதும் செய்யக் கூடிய பயிற்சி. 10 அடி இடமிருந்தாலும் நடக்கலாம். இடமே இல்லை என்றால் நின்ற இடத்திலே கூட 'நடப்பது போல' ஆக்‌ஷனுடன் பயிற்சி செய்யலாம். இது பயனுள்ள எளிய கார்டியோ பயிற்சியாகும். நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த பதிவில் வாக்கிங் செல்வது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமா என்பது குறித்து காணலாம்.

25

இரத்த அழுத்தம் என்றால் இதயம் தமனி சுவர்களில் வழியே இரத்தம் அனுப்பும்போது ஏற்படக் கூடிய அழுத்தம். இவ்வாறு தமனி சுவர்களில் தொடர்ந்து அதிக அழுத்தம் ஏற்படுவது இதயத்தையும் இரத்த நாளங்களையும் சேதப்படுத்தும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பிரச்சினைகள் வரக் கூடும். இதை தடுக்க உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது அவசியமாகிறது.

35

வாக்கிங் - இரத்த அழுத்தம்;

நடைபயிற்சி இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் எளிய பயிற்சியாகும். தொடர்ந்து வாக்கிங் சென்றால் இதயம் வலுப் பெறும். வலிமையான இதயம் இரத்தத்தை சீராகவும் சிறப்பாகவும் மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும். தமனிகளில் அழுத்தம் குறையும். தமனிகளின் செயல்பாடும், நெகிழ்வுத்தன்மையும் மேம்பட நடைபயிற்சி உதவுகிறது. உடல் பருமன் இதயம், இரத்த நாளங்களில் அழுத்தத்தை உண்டாக்கும் ஒரு காரணியாகும். நடைபயிற்சி எடையை கட்டுக்குள் வைக்க உதவும். இதனால் இதய நோய் அபாயம் குறைவு.

45

வாக்கிங் செல்வது மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறன் மேம்படுத்த வாக்கிங் உதவும். அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வருவதால், உயர் இரத்த அழுத்தத்திற்கான ஆபத்து குறையும். மன அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட இரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடிய காரணிகளை குறைப்பதற்கு நடைபயிற்சி சிறந்த பலன்களை தரும்.

55

எவ்வளவு நேரம் வாக்கிங்?

தொடக்கத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது போதுமானது. படிப்படியாக உங்களுடைய வேகத்தையும், தூரத்தையும் அதிகரித்து 30 நிமிடங்கள் வரை நடக்கலாம். படிப்படியாக உங்களுடைய வேகத்தையும், நேரத்தையும் கூட்டிக் கொள்ளலாம். நடக்கும்போது உங்களுடைய தோரணையை கவனிப்பது அவசியம். தலையை குனிந்தபடி நடக்கக்கூடாது. நேராக நிமிர்ந்து, எதிரே பார்த்து நடக்க வேண்டும். நடக்கும்போது கைகளை வீசி நடப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories