ஜப்பானிய முறை வாக்கிங்; வெறும் 30 நிமிடங்களில் 10 ஆயிரம் அடிகளின் நன்மைகள் கிடைக்கும்

Published : Jun 03, 2025, 09:07 AM IST

தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்க நேரமில்லை என்றால், இந்த ஜப்பானிய முறையை பின்பற்றி வெறும் 30 நிமிடங்களில் 10 மடங்கு நன்மைகளை பெறுங்கள்.

PREV
14

Japanese Technique How To Get 10000 Steps Benefits In 30 Minutes : தினம் 10,000 காலடிகள் நடப்பது ஒருவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கவும் நடப்பது மிகவும் உதவியாக இருக்கும். ஒருவருடைய உடல் பருமன் அதிகமாகும்போது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் ஆபத்து அதிகமாகிறது.

24

தினமும் 10,000 காலடிகள் நடக்கும் போது எடை மேலாண்மை சரியாக இருக்கும். இதனால் பல்வேறு நோய்களை தடுக்க முடியும். இருப்பினும் இந்த காலகட்டத்தில் அனைவராலும் தினமும் 10,000 காலடிகள் இலக்கை எட்ட முடிவதில்லை. இந்த சூழலில் ஜப்பானிய நடைபயிற்சி முறையில் எப்படி 30 நிமிடங்களில், நடைபயிற்சியின் 10 மடங்கு நன்மைகளை பெற முடியும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

34

இந்த ஜப்பானிய வாக்கிங் முறை 2007 இல் கண்டுபிடிக்கப்பட்டது. வெறும் 30 நிமிடங்கள் போதும். நேரம் குறைவாக இருந்தாலும் கூட நடைபயிற்சியின் நன்மைகளை பெறலாம். இந்த நுட்பமானது 30 நிமிடங்கள் சுழற்சி முறையில் நடப்பதாகும். 3 நிமிடங்கள் விறுவிறுப்பாகவும், 3 நிமிடங்கள் மெதுவாகவும் முறையே 30 நிமிடங்கள் மாறிமாறி நடக்க வேண்டும். இடையில் ஓய்வு எடுக்கக் கூடாது.

44

இந்த ஜப்பானிய நடைபயிற்சி குறைந்த நேரத்தில் சிறந்த கார்டியோ பயிற்சியாக இருக்கும். இதய செயல்பாட்டையும் தசை ஈடுபாட்டையும் மேம்படுத்தும். தொடர்ந்து இப்படி நடப்பது இன்சுலின் உணர்திறன் மேம்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். அதிகபடியான சோர்வைக் குறைக்கும். ஆய்வுகள் இந்த மாதிரி நடப்பது 10,000 காலடிகள் இலக்கை அடைய முடியாமல் இருந்தாலும் வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories