உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி நல்ல பலன் தரக் கூடிய பயிற்சியாகும். இதன் முழுப்பயன்களை பெற குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடப்பது அவசியம். இதற்கு விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. மிதமான வேகத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டே 5000 அடிகளை நடந்துமுடிக்கலாம்.
27
யாருக்கு அதிக நன்மை?
வயதானவர்கள் நாள்தோறும் 1 மணிநேரம் கண்டிப்பாக நடக்க வேண்டும். இதனால் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைய உதவும். நடைபயிற்சி செய்வதால் மூட்டு வலி குறைவதோடு, உடலின் சமநிலை மேம்படுகிறது. வயதானவர்களின் நினைவாற்றலும் மேம்பட நடைபயிற்சி உதவும்.
37
இதய ஆரோக்கியம்:
தொடர்ந்து 1 மணி நேரம் இடைவிடாமல் நடந்தால் அது சிறந்த கார்டியோ பயிற்சியாகும். ஒருவர் நாள்தோறும் 5000 காலடிகள் நடப்பது அவருடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இதய நோய்கள், பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.
வாக்கிங் உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் 1 மணிநேரம் நடந்தால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து அதிக கலோரிகளை எரிகிறது இதன் காரணமாக உடல் எடை உயராமல் கட்டுக்குள் இருக்கும்.
57
மன ஆரோக்கியம்
மனநிலையை மேம்படுத்த நடைபயிற்சி சிறந்த ஒன்றாக இருக்கும். மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையே நல்ல தூக்கம் தான். தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்ய தினமும் ஒரு மணி நேரம் நடப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
67
தசை வலி:
உங்களுடைய கீழ் உடலை மட்டுமல்லாமல் மேல் உடல் தசைகளையும் வலுவாக்க வாக்கிங் உதவும். தினமும் ஒரு மணி நேரம் நடப்பது உங்களுடைய இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும். உங்களுடைய தசையும் வலிமையாக மாற்றுகிறது.
77
திறன்:
தினமும் ஒரு மணி நேரம் நடப்பதற்கு உங்களுக்கு அதிகமான ஆற்றல் தேவைப்படும். அதைச் செலுத்தி நடக்கும் போது உங்களுடைய ஆற்றல் மட்டம் உயரும். தினமும் காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடப்பவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள்.