கரும்புள்ளிகளை அகற்றுவது எளிதானது காரியம் கிடையாது. ஆனால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை தீர்க்கலாம். தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
கரும்புள்ளிகளை நீக்க, இரவில் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் சில நாட்களில் கரும்புள்ளிகள் நீங்கும்.
தேங்காய் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இதை இரவில் படுக்கும் போது முகத்தில் பூசி மசாஜ் செய்தால், ஒரு வாரத்தில் உங்கள் முக சருமம் அற்புதமான பொலிவைப் பெறும்.
தீமைகள்
தேங்காய் எண்ணெய் வெப்பத்தை விளைவிக்கும். அதை அதிகமாக பயன்படுத்தினால் சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும். சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் பருக்கள் வர வாய்ப்புள்ளது. வெயில் காலத்தில் முகத்தில் அதிகமாக தேங்காய் எண்ணெய் தடவி வந்தால், சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும். அதிகமாக தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால், முகத்தில் புதிய முடிகள் வளரலாம்.
இதையும் படிங்க: உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது?