வெறும் 10 நிமிடங்களில் கருவளையம் நிரந்தரமா போகணுமா.. வீட்டுல இருக்கிற இந்த ஒரு பொருள் போதும்..

First Published Jan 27, 2023, 4:13 PM IST

பொலிவான முகத்தில், கருவளையங்கள் நீங்க எளிமையான முறைகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம், சத்து குறைபாடு, தோல் ஒவ்வாமை பல காரணங்களுக்காக கருவளையங்கள் ஏற்படுகின்றன. பலர் அதனை நீக்க ஏராளமான பணம் செலவழிக்கிறார்கள். எப்போதும் மொபைல், கணினியை பார்ப்பதாலும் அதிக கருவளையங்கள் ஏற்படலாம். வயதாகுவதும் இதற்கு காரணம். சிலருக்கு மரபியல் காரணங்களால் வரலாம். ஆகும். கருவளையங்களை எளிதில் அகற்றுவதற்காக வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகளை இங்கு காணலாம். 

ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகு உருளைக்கிழங்கை எடுத்து மெல்லியதாக நறுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளை கண்ணில் வைக்கும் போது கண்களை அமைதிப்படுத்தும், படிப்படியாக கருவளையங்களையும் குறைக்கும். 

தடிமனாக வெள்ளரி துண்டுகளை வெட்டவும். அவற்றை குளிர்வித்து, குறைந்தது 30 நிமிடங்களுக்கு கண்களில் மசாஜ் செய்ய தடவவும். கண்களை கழுவ சூடான நீரை பயன்படுத்தவும். 

இதையும் படிங்க: பெண்களே! சுயஇன்பம் இப்படி செய்யக் கூடாது.. எல்லையில்லா இன்பம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!

கருவளையங்களைக் குறைக்க, தேங்காய் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெயுடன் மஞ்சளைப் பயன்படுத்தவும். மஞ்சளை எண்ணெய்யுடன் கலந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழ் பகுதியில் தடவி, அது உலர 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவவும். 

வைட்டமின் ஏ அதிகம் கொண்டிருக்கும் பாலில் அதிகமான ரெட்டினாய்டுகள் உள்ளன. சருமத்திற்கு நல்லது செய்ய நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் பால் குடிப்பதுதான். காட்டன் பேடில் பாலை ஊறவிட்டு கருவளையங்களில் சுமார் 10 நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மேற்குறிப்பிட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மாயமாகும். அதனுடன் நல்லதூக்கம் அவசியம், மன அழுத்தத்தையும் குறைத்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: இந்த போராட்டம் முடிவுக்கு வராது - மயோசிடிஸ் நோய்க்கு பிறகு கடும் உடற்பயிற்சி, புது டயட்னு ஆளே மாறிபோன சமந்தா

click me!