செலவே இல்லாமல் வீட்டிலேயே கோல்டன் பேஷியல் வெறும் 5 நிமிடத்தில் போடலாம்,இந்த டிப்ஸ் தெரிந்தால் முகம் ஜொலிக்கும்

First Published | Oct 17, 2022, 10:01 AM IST

Face beauty tips: தங்கம் போல முக ம்ஜொலிக்க வீட்டிலேயே ஒரு ஜெல் தயார் செய்வது எப்படி ..? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.  

அழகை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பெண்களுக்கு எப்போதுமே தங்களுடைய சருமத்தை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு பண்டிகையும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட, சருமம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்து கொள்வார்கள்.

மேலும் படிக்க ..ரோஸ்வாட்டர், வெள்ளரி, மஞ்சள் கொண்டு செய்யப்படும் ஐஸ் கட்டிகள்- எதற்கு இதெல்லாம்?

இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து பெரும்பாலான 'பெண்கள் பியூட்டி பார்லர்' சென்று தங்களை அழகுப்படுத்துவர். ஆனால் நம்முடைய வீட்டிலுள்ள சில எளிமையான பொருள்களை வைத்து செலவே இல்லாமல் வீட்டிலேயே இந்த கோல்டன் பேஷியலை நீங்களே செய்து கொள்ளலாம். 

மேலும் படிக்க ..ரோஸ்வாட்டர், வெள்ளரி, மஞ்சள் கொண்டு செய்யப்படும் ஐஸ் கட்டிகள்- எதற்கு இதெல்லாம்?

Tap to resize


 ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரோஸ் வாட்டர் 2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்சு, கற்றாழை , முல்தானிமட்டி, இந்த எல்லா பொருட்களையும் ஒரு ஸ்பூனை வைத்து அடித்து கலக்கினால் சூப்பரான கோல்டன் கலர் ஜெல் நமக்கு கிடைத்திருக்கும். 

 இந்த ஜெல்லை காலை மாலை இரண்டு வேளை பயன்படுத்தலாம்.
மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்.

அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் பூசி கொள்ளவும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி சிறந்த ஒன்று. மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.

இதை அப்படியே முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்தால், முகம் உடனடியாக பொலிவு பெறும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதே போல செய்து வாருங்கள்.  

Latest Videos

click me!