Skin Care : சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள காபி பேஸ்பேக்கை ட்ரை பன்னுங்க!

First Published | Oct 12, 2022, 7:01 PM IST

அதிகாலையில் சுவையான டீ அல்லதே காபி குடிப்பது சிலருக்கு அந்த நாளையே புத்துணர்ச்சியாக தொடங்க வழிவகுக்கும். காபியை குடிக்கும் போது நமக்கு கிடைக்கும் அதே புத்துணர்ச்சியை, சருமத்தில் தேய்க்கும் போதும் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். குறிப்பாக காபித் தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் சருமத்தை பிரகாசமாக மாற்றும். இப்படி காபியில் சருமத்தைப் பொலிவாக மாற்றும் பல அற்புதமான பண்புகள் உள்ளன. காபித் தூளை பேஸ் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து, தோல் அழற்சி மற்றும் முகப்பருக்களை குறைக்கிறது. சரும பராமரிப்பில் காபி எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை இப்போது காண்போம்.
 

புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும்

காபியில் உள்ள பாலிபினால்கள், புற ஊதா கதிர்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றவை. மேலும், சூரிய ஒளியின் காரணமாக ஏற்படும் சரும பாதிப்பையும் காபி குறைக்கிறது. 1 டேபிள் ஸ்பூன் காபியுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் நீர் கலந்து முகம், கைகளில் தடவி 15 நிமிடங்களுக்கு பின்னர் கழுவினால், சருமத்திற்கு மிகவும் நல்லது.
 

வறண்ட சருமம் பொலிவாகும்

காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சருமம் முதிர்ச்சி அடைவதில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், அரை டீஸ்பூன் காபித் தூளில், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, பேஸ்ட் மாதிரி செய்து முகம் முழுக்க தடவி விட வேண்டும்.பிறகு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவலாம். இப்படி செய்வதால், வறண்ட சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

Tap to resize

முகப்பருக்களை நீக்கும் காபி

இயவயதினருக்கு முக அழகைக் கெடுப்பதற்காகவே வருவது தான் முகப்பருக்கள். சில நாட்களில் பருக்கள் மறைந்தாலும், அது ஏற்படுத்தும் கரும் புள்ளிகள் எளிதில் மறைவதில்லை. பிடிவாதமான முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை காபித் தூள் மிக எளிதில் நீக்கி விடும். காபியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. காபித் தூளை சிறிதளவு தண்ணீரில் கலந்து, உங்கள் முகத்தில் மெதுவாக தேய்த்தால், முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகப்பருக்களைப் போக்கி விடும்.

காபியில் பேஸ் பேக்

காபியில் பேஸ் பேக் செய்து முகத்தில் பூசுவதன் மூலம் முகம் பொலிவாக மாறும். 3 டீஸ்பூன் காபித் தூளை, 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் கலக்கி கொள்ளுங்கள். அதுடன் 3 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கொண்டால் காபி பேஸ் பேக் ரெடியாகி விடும். இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் அல்லது கலவையானது முகத்தில் நன்றாக உலர்ந்து போகும் வரை முகத்தில் வைத்திருந்து, பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். பிறகு, முகம் பொலிவாக மாறும்.

கருவளையம் நீங்கும்

கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையம் சிலரைப் பாடாய்ப்படுத்தும. இதனைப் போக்க அரை டீஸ்பூன் காபித் தூளுடன், 1 டீஸ்பூன் தேன் கலந்து கண்களின் கீழ் கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் மறைந்து விடும். மேலும், இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. 

கண்களின் வீக்கத்தை போக்கும்

காபியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளதால், கண்களை சுற்றி ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. அரைத்த காபித் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, காட்டன் துணியில் நன்கு நனைத்து, வீங்கிய பகுதியில் தேய்த்து வந்தால், வீக்கம் படிப்படியாக குறையும்.

Latest Videos

click me!