கறிவேப்பிலை, சமையலுக்கு சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை மெலனின் உற்பத்தியைத் தூண்டி, இளநரையைக் குறைக்க உதவுகின்றன. கறிவேப்பிலை மயிர்க்கால்களை வலுப்படுத்தி, கூந்தல் உதிர்வதைக் குறைத்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது கூந்தலுக்கு இயற்கையான கருமையையும், பளபளப்பையும் தருகிறது.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை கால் கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து, இலைகள் கருகும் வரை சூடுபடுத்தவும். எண்ணெய் குளிர்ந்ததும், வடிகட்டி இந்த எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிக்கலாம். அல்லது கறிவேப்பிலை இலைகளை அரைத்து தயிருடன் கலந்து தலைமுடிக்கு பேக்காகப் போட்டு 30 நிமிடங்கள் கழித்து அலசலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதைச் செய்வது நல்ல பலன் தரும்.