
சமீபகாலமாகவே ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முடி தொடர்பான பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. முடி உதிர்தல், முன்கூட்டியே முடி நரைத்தல், முடியின் முனையில் பிளவு ஏற்படுதல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் இதில் அடங்கும். பெரும்பாலான மக்கள் இதுபோன்ற முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு சந்தையில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றால் அவர்களின் தலைமுடி ஆரோக்கியம் மேலும். மோசமடையும். இட்டைக்கு சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கற்றாழை உங்களுக்கு உதவும்.
சேதமடைந்த முடியை இயற்கை முறையில் சரி செய்ய கற்றாழை மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. உண்மையில் கற்றாழையில் ஈரப்பதமூட்டும் பண்புகள் இருப்பதால் இது முடி இருக்கு சிறந்த பலனை தரும். சரி இப்போது செய்து முடிந்த உங்களது முடியை இயற்கை முறையில் மென்மையாகவும், பளபளப்பாகவும் மற்ற கற்றாழையுடன் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வறண்டு கூந்தலில் இருந்து விடுபட கற்றாழை ஜெல்லுடன் முட்டை சேர்த்து அதை உங்களது தலைமுடியில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். ஷாம்பு போட்டு பிறகு கண்டிஷனர் போட மறகாதீர்கள். கற்றாழை உங்களது தலைமுடியை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் மாற்றும். முட்டையில் இருக்கும் புரதம் முடி உடைதல் மற்றும் உதிர்தல் பிரச்சனையை குறைக்கும். வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹேர் மாஸ்க் நீங்கள் போட்டு வந்தால் இயற்கையாகவே உங்கள் முடி பளபளப்பாக மாறும்.
கூந்தலை மென்மையாக, பளபளப்பாக மற்றும் முடி உதிர்தலை தடுக்கவும், பொடுகு பிரச்சனையை நீக்கவும் வெந்தயம் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க் உங்களுக்கு உதவும். இதற்கு ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து அவற்றுடன் கற்றாழை ஜெல் கலந்து அதை ஹேர் மாஸ்காக பயன்படுத்துங்கள்.
சேதமடைந்த முடியை சரி செய்ய தயிர் மற்றும் கற்றாழை ஜெல் ஹேர் மாஸ்க் உதவும். இதற்கு ஒரு சிறிய கப் தயிர் சிறிதளவு கற்றாழை ஜெல் கலந்து அதை நன்கு காலக்கி அதை தலை முடி முழுவதும் தடவி பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து போட்டு வந்தால் பொடுகு பிரச்சனை விரைவில் நீங்கும்.
2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 2 ஸ்பூன் வெங்காய சாறு கலந்து அதை உச்சந் தலையில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வெங்காய சாறு முடி வளர்ச்சி தூண்டும் மற்றும் முடி அடர்த்தியாக உதவும். இந்த டிப்ஸை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி கலந்து அதை உங்களது உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குழிக்க வேண்டும். நெல்லிக்காய் பொடி முடியை வலிமையாக்கும் மற்றும் பல பளபளப்பைத் தரும்.