முடி நீளமாக அடர்த்தியாக வளரவும், முடி உதிர்வதை தடுக்கவும் பலரும் பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது. முடிக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளரும், முடி உதிர்தல் நின்று விடும் என்று பெரும்பாலனோர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, தலைமுடி ஆரோக்கியமாக வளரவும் முடி உதிர்தலை தடுக்கவும் எண்ணெய் மட்டும் போதாது. சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். இந்த பதிவில் முடி உதிர்வதை தடுக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும் சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
26
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவை
ஆரோக்கியமான தலை முடி வளர்ச்சிக்கு புரதங்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவை. ஏனெனில் நம்முடைய தலைமுடியானது புரதங்களால் ஆனது. எனவே முட்டை, பச்சை இலை காய்கறிகள், பால், தயிர், பருப்பு வகைகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். இதுதவிர வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ள உணவுகளும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. கேரட் கீரை சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றில் அவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். வலுவாகவும் இருக்கும்.
36
மன அழுத்தம்
மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. எப்படி மன அழுத்தத்தில் இருக்கும்போது சில ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன அவை முடி வளர்ச்சியை தடுக்கும் எனவே மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம் மற்றும் சிறிய உடற்பயிற்சி செய்யுங்கள். அவை மன அழுத்தத்தை குறைக்கும். இதனால் முடி உதிர்தலும் நிற்கும்.
நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும் தேவைப்படுகிறது. நாம் தினமும் போதுமான அளவு தூங்கினால் மட்டுமே தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். முடி உதிர்தல் பிரச்சனையும் வராது.
56
சுத்தமான தலைமுடி
தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும் தலையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அதுபோல சூடான நீரில் தலைக்கு குளித்தால் முடியின் வேர்கள் பலவீனமடைந்து முடி உதிர்தலை ஏற்படுத்தும் எனவே தலைக்கு ஒருபோதும் சூடான நீரை பயன்படுத்த வேண்டாம். அதுமட்டுமின்றி தலைமுடியை தூண்டல் கடுமையாக ஒருபோதும் தேய்க்க கூடாது. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்ப வேண்டாம். தலை முடி வார அகன்ற பல் கொண்ட சீப்பு பயன்படுத்துவது நல்லது.
66
இவற்றை அடிக்கடி பயன்படுத்தாதே!
பலர் தலைமுடிக்கு அடிக்கடி ஹேர் டை பயன்படுத்துவது மட்டுமல்லாமல் ஹேர் ஸ்ட்ரெயிட்னர் போன்ற மின்னணு சாதனங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை முடியை மோசமாக சேதமாக்கிவிடும். முடியும் வேர்களை பலவீனப்படுத்தி முடி உதிர்தலை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.