நெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில் கூட நெய்க்கு சிறப்பு இடமுண்டு. நெய்யில் வைட்டமின்கள், தாதுக்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த நெய்யை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, 2 நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டால் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
வறண்ட சருமம்
நெய்யில் நிறைய கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் அவை சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி சென்று நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படும். மேலும் சருமத்தில் நீண்ட நேரம் ஈரப்பதத்தை தக்க வைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு நெய் பெஸ்ட் மாய்ஸரைஸர் ஆகும். எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் நெய்யை தடவி பிறகு மறுநாள் காலை முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக மாறும்.
35
பளபளப்பாக மாறும்
தினமும் இரவு தூங்கும் முன் நெய்யை முகத்தில் தடவி விட்டு மசாஜ் செய்து அப்படியே தூங்கினால் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக மாறும். நெய்யில் இருக்கும் பலவிதமான வைட்டமின்கள் சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
உங்களது முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் இருந்தால் அதை மறைய செய்ய நெய் பயன்படுத்தலாம். நெய்யில் இருக்கும் ஆன்டி பாக்டரியல் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அவற்றை நிரந்தரமாக மறைய செய்ய உதவுகிறது.
55
இளமையாக இருக்க
தினமும் இரவு தூங்கும் முன் சில துளிகள் நெய்யை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து இரவு அப்படியே இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். மேலும் நெய்யில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி சருமத்தை எப்போதுமே இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
குறிப்பு : எண்ணெய் சருமம் உள்ளவர்கள் நெய் அதிகமாக பயன்படுத்தினால் பருக்கள் வர வாய்ப்பு உள்ளன. எனவே நீங்கள் நெய் தடவிய சுமார் அரை மணி நேரம் கழித்து உடனே கழுவி விடுவது தான் உங்களுக்கு நல்லது.