பல பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை எதுவென்றால் முகத்தில் முடி வளர்வதுதான். முகத்தில் வளரும் முடியை நீக்க சில பெண்கள் வேக்சிங் செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் ரேசரை பயன்படுத்தி முடியை அகற்றி விடுகிறார்கள். ஆனால் இப்படி பணம் செலவழித்து சிகிச்சை செய்து கொள்வது தற்காலிக தீர்வை மட்டும் தான் தரும். சருமத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆனால் இயற்கை வழியில் இந்த பிரச்சனைக்கான தீர்வு காண ஒரு பொருள் இருக்கிறது. அதற்கென நீங்கள் பணத்தை அதிகமாக செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படி என்னவென்று யோசிக்கிறீர்களா? அந்த சூப்பர் நேச்சுரல் பொருள்தான் கடலை மாவு.
26
கடலை மாவு நன்மைகள்
கடலை மாவில் புரோட்டின் அதிகமாகவே உள்ளன. இது சருமத்தை முற்றிலுமாகிவிடும். அதாவது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை முற்றிலுமாக நீக்கி சருமத்தை நிறத்தை மேம்படுத்தும் முகத்தில் வளரும் முடியை அகற்றி விடும். மேலும் முடி வளர்ச்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும். சரி இப்போது முகத்தில் இருக்கும் முடியை அகற்ற கடலை மாவை கொண்டு சில ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அவை என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
36
கடலை மாவு, மஞ்சள் மற்றும் தேன்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவுடன், சிறிதளவு தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பிறகு ஈரமான துணியால் முகத்தை துடைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த பேஸ் பற்றி வாரத்திற்கு 2-3 முறை போடலாம்.
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு போட்டு, அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு ஈரமான துணையால் துடைத்து, பின் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போடலாம்.
56
கடலை மாவு கற்றாழை ஜெல் மற்றும் பப்பாளி
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவுடன், 1 ஸ்பூன் பப்பாளி கூழ் மற்றும் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து அதை முகப்பில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு,/பிறகு ஈரமான துணியால் துடைத்து பின் குனிந்து நீரால் முகத்தை கழுவுங்கள். இந்த பேஸ் பேக்கை வரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போடவும்.
66
கடலை மாவு, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போட்டால் போதும்.