
முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். சிலர் தலைமுடிக்கு வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலரோ மஞ்சள் கருவும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த பதிவில் தலைமுடி வேகமாக வளர முட்டையின் வெள்ளை கருவை தலைமுடிக்கு எப்படியெல்லாம் அப்ளை செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
உங்களது முடிவின் நீளத்தை பொருத்து நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முட்டையை எடுத்து, வெள்ளை கருவை மட்டும் கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இப்போது அதை உங்களது உச்சந்தலை முதல் நுனி வரை அப்ளை செய்து சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். மறக்காமல் ஹேர் ஷவர் கப் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்கவும்.
முட்டை மற்றும் வாழைப்பழம் இவை இரண்டும் தலைமுடியில் வறட்சியை போக்கவும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்கும். இதற்கு முட்டையின் வெள்ளை கருவுடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்து அதை தலையில் ஹேர் மாஸ்காக போடவும். அரை மணி நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். வேண்டுமானால் இதனுடன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
தலை முடி உடைய கூடியவர்களுக்கு இந்த ஹேர் மாஸ்க் பெஸ்ட் சாய்ஸ். தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு கண்டிஷனராக செயல்படும், முடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் வேர்க்கால்களை ஈரப்பதமாக வைக்கும். 2 முட்டையின் வெள்ளை கருவுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்து அதை உங்களது உச்சந்தலை முதல் நுனிவரை தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு ஹெர்பல் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த மாஸ்க் அப்ளை செய்த பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம்.
உங்களது தலைமுடி ஒல்லியாக இருந்தால் முட்டையின் வெள்ளை கருடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதை முடியின் உச்சந்தலை முதல் முனிவரை தடவி பிறகு ஷாம்பு போட்டு குடிக்கவும் இந்த ஹேர் மாஸ் முடிக்கு ஊட்டச்சத்து வழங்கி தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.
உங்களது முடி வறண்டோ அல்லது உடையக்கூடியதாக இருந்தால் இந்த ஹேர் மாஸ்க் சிறந்த தேர்வு. இதற்கு ஒரு முட்டையின் வெள்ளை கருவில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக அடித்து அதை முடியின் உச்சி முதல் நுனி வரை தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பின் லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த ஹேர் மாஸ்க் முடிக்கு பளபளப்பை அளிக்கும் மென்மையாக மாற்றும் மற்றும் முடியின் வேர்களை வலுப்படுத்து.