
முடி உதிர்தலால் பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவரும் அவதிப்படுகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களுக்கு முடி கொட்டினால் சொட்டை வந்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால் இனி அதுகுறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினாலும் சரி, வழுக்கை விழுந்தாலும் சரி ஆலிவ் ஆயிலை கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பயன்படுத்தினால் போதும். வழுக்கை தலையிலும் முடி வேகமாக வளரும். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆவில் எண்ணெயில் ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இவை முடியின் வேர் வரை சென்று முடியை வலிமையாக உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தில் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்க தூண்டும். ஆலிவ் எண்ணெய் அடர்த்தியாக இருப்பதால் இதை நீங்கள் கம்மியாக பயன்படுத்தினால் மட்டும் போதும்.
ஆலிவ் வாயிலை சூடாக்கி அதை உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்தால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடியும் வளர்ச்சி தூண்டப்படும். இதற்கு 2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். கை பொறுக்கும் சூடு படுத்தினால் போதும். இப்போது விரல் நுனியால் எண்ணெயை தொட்டு உச்சந்தையில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
வழுக்கையாகவும், முடி ஒல்லியாகவும் இருப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இதற்கு ஆலிவ் ஆயில் தடவியில் ஷவர் கேப் போட்டு பிறகு காலை எழுந்ததும் லேசான ஹெர்பல் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முடி வேகமாக வளரும் மற்றும் பளபளக்கும்.
ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை கொண்டு ஹேர் மாஸ்க் போட்டால் முடி வேகமாக வளரும். ஆலிவ் ஆயிலில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. அதுபோல முட்டையில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் முடியும் வேர்களை பலப்படுத்தி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டும். உங்களுக்கு முட்டையின் மஞ்சள் கரு பிடிக்கவில்லை என்றால், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்தி ஹேர் பேக் போடலாம். இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு சுமார் அரை மணி நேரம் கழித்து, ஹெர்பல் ஷாம்பு போட்டு குளிக்கவும்.
ஆலிவ் ஆயிலை நேரடியாக தலைக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துவது கூடுதல் நன்மைகளை வழங்கும். இதற்கு ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சமஅளவு எடுத்து அதை சூடாக்கி பிறகு உச்சந்தலை முதல் நுனி வரை தடவி நன்கு மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
வறண்ட முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். இதற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயியிலுடன், 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து அதை உச்சந்தலை முதல் நுனி வரை தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால் முடி வேகமாக வளரும்.
பொதுவாக பலர் தலைக்கு குளிக்கும் முன் தலையில் எண்ணெய் வைத்து குளிப்பார்கள். ஆனால் நீங்கள் மற்ற எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் காண்பீர்கள். இதற்கு தலைக்கு குளிப்பதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன் தலையில் ஆலிவ் எண்ணெய் அப்ளை செய்து ஊற வைத்துவிட்டு பிறகு வழக்கம் போல தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது குறையும் மற்றும் முடியும் வளரும்.