Milk Face Pack : ஒரு ஸ்பூன் பால் போதும்! கொரியன் மாதிரி முகம் பளபளக்கும்; சூப்பர் பேஸ் பேக் டிப்ஸ்

Published : Aug 22, 2025, 04:42 PM IST

கொரியன் பெண்களைப் போல உங்களது முகமும் கண்ணாடி மாதிரி பளபளக்க முகத்தில் பாலை எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தால் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
Raw Milk Face Pack

பெண்கள் எப்போதுமே தங்களது முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். பார்லருக்கு செல்வோர் ஒருபுறம் இருந்தாலும், சில பெண்கள் வீட்டில் கிடைக்கும் கடலை மாவு, மஞ்சள், அரிசி மாவு, கற்றாழை போன்ற பொருட்களை வைத்து தங்களது முகத்தை அழகுப்படுத்தி கொள்கிறார்கள். அந்த வரிசையில் பாலும் உண்டு.

பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கவும் மற்றும் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே, பாலை தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் எப்போதுமே பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்குமாம். இத்தகைய சூழ்நிலையில், கொரியன் பெண்களைப் போல உங்களது முகம் பளபளக்க பாலை எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

26
பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் மஞ்சள் பொடியுடன் நான்கு ஸ்பூன் பால் கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் போட்டு வந்தால் முகம் தங்கம் போல ஜொலி ஜொலிக்கும். இந்த ஃபேஸ் பேக்கை காலையில் பயன்படுத்துவதை விட இரவில் பயன்படுத்தினால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

36
பால், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஃபேஸ் பேக்

ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் காய்ச்சாத பாலுடன், 1 ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பாலில் கிளன்சிங் பண்பும், தேனில் மாய்ஸ்சரைஸிங் மற்றும் எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் பண்பும் உள்ளன. இவை மூன்றும் சேர்ந்து சருமத்தில் உள்ள கருமையை போக்கும் மற்றும் இறந்த செல்களை நீக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

46
பால், முல்தானி மட்டி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 4 ஸ்பூன் பாலுடன், 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் முல்தானி மட்டி சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை போடலாம்.

56
பச்சை பால் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளியில் பைப்பேன் நிறைந்துள்ளது இது சருமத்தை குறித்து பிரகாசமாக வைக்கும். பச்சை பாம்பு பாலுடன் பப்பாளியை ஃபேஸ் பேக் போட்டால் சருமம் மென்மையாக மாறும். இதற்கு இரண்டு ஸ்பூன் பச்சை பாலுடன் ரெண்டு ஸ்பூன் பழுத்த பப்பாளி கூழ் சேர்த்து ஃபேஸ் பேக்காக போடவும். வாரத்திற்கு இரண்டு முறை போடலாம்.

66
பச்சை பால் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் எரிச்சலை தணிக்க உதவும் மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் பச்சை பாலுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகத்திற்கு பயன்படுத்த வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

Read more Photos on
click me!

Recommended Stories