
உங்களது கால் முட்டி ரொம்ப கருப்பா இருக்கிறதா? அதனால் நீங்கள் சங்கடமாக உணர்கிறீர்களா? கால் முட்டி ரொம்ப கருப்பா இருக்கிறதுக்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் இறந்த செல்கள் அதிகமாக தேங்கியிருப்பது தான். அது மட்டுமல்லாமல் முழங்கால்களை மண்டியிட்டு உட்காருவது, போதுமான பராமரிப்பு இல்லாமல் போன்றவையும் காரணமாகும். இது தவிர, நம்முடைய உடலின் மற்ற பாகங்களை தவிர மூலம் கால் சருமம் சற்று தடிமனாகவே இருக்கும். மேலும் அந்த பகுதியில் எண்ணெய் சுரப்பியும் குறைவாகவே இருப்பதால் அதிக வறட்சி ஏற்படும். இதன் விளைவாக கருமையாக மாறும்.
கால் முட்டி கருப்பாக இருந்தால் குட்டையான ஆடைகளை அணிவது சங்கடமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி கால் முட்டி கருமையை சுலபமாக போக்கிவிடலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 ஸ்பூன் தேன் கலந்து அதை கால் முட்டியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3 முறை இப்படி செய்து வந்தால் கால் முட்டியில் கருமை மறையத் தொடங்கும்.
இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து அதை கால் முட்டியில் தடவி 10 நிமிடங்கள் மென்மையாக கேட்க வேண்டும். பிறகு சூடான நீரில் ஒரு துணியை நனைத்து அதை கொண்டு துடைக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் முழங்காலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, கருமையும் மறைய தொடங்கும்.
ஒரு கிண்ணத்தில் சம அளவு கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் நன்கு கலந்து கால் முட்டியில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் முழங்கால் கருமை மறைய ஆரம்பிக்கும்.
ஒரு கிண்ணத்தில் சம அளவு பேக்கிங் சோடா மற்றும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை பேஸ்ட் போலாக்கி அதை கால் முட்டியில் தடவி சுமார் 2-3 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். அதன் பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
இதற்கு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவுடன், 1 ஸ்பூன் தயிர் கலந்து அந்த பேஸ்ட்டை மூலம் காலில் தடவி நன்கு காய்ந்ததும் சாதாரண தண்ணீரால் கழுவ வேண்டும். இந்த பேக் முழங்காலில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி கருமையை போக்கும்.