
பளபளப்பான அழகான சருமத்தை தான் நம் அனைவரும் விரும்புவோம். இதற்கான தீர்வுகள் நம் வீட்டு கிச்சனிலேயே இருக்கின்றது. அவற்றை பயன்படுத்தி சருமத்தை பிரகாசமாக மாற்றுங்கள். அதுதான் மஞ்சள். இது பல நூற்றாண்டுகளாகவே சரும பராமரிப்பில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மஞ்சள் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எந்த வகையான சருமத்திற்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக் உங்களது சருமத்தை தங்கம் போல ஜொலிப்பாக மாற்றும். சரி இப்போது பளபளபான சருமத்தை பெற சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த பதிவை காணலாம்.
மஞ்சள் மற்றும் தயிர் இந்த இரண்டு கலவையானது ஒரு பெஸ்ட் மாய்ஸ்ரைசராக செயல்படும். தயிரில் புரோட்டின், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இப்போது 1 ஸ்பூன் மஞ்சளுடன், 2 ஸ்பூன் தயிர் கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு சூடான நீரில் கழுவ வேண்டும்.
தேன் முகத்தை ஈரப்பதமாக வைக்கும். மறுபடியும் மஞ்சளில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் முகப்பரு மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை நீக்க உதவும். எனவே மஞ்சளுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்களது சருமத்தை எப்போதுமே ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும் சருமத்தின் கருமை மற்றும் முகப்பருக்களை நீக்கும்.
மஞ்சளுடன் பச்சை பால் கலந்து முகத்தை தடவினால் முகத்தில் இருக்கும் பருக்கள் குறையும், கருமை நீங்கும் மற்றும் சருமத்தில் எரிச்சல் தணியும். இது தவிர சருமத்தின் நிறம் கூடும். முக்கியமாக முகம் எப்போதுமே பளபளப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இந்த கலவையை உங்களது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன அவை முன்கூட்டியே வயதாவதை தடுக்கும் மற்றும் தோல் சேதமடைவதை குறைக்கும். மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலவையை முகத்தில் தடவி வந்தால் சருமம் மிருதுவாகவும், பிரகாசமாகவும் மாறும்.
சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் நல்லது. ஏனெனில் தக்காளியில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வீக்கத்தை குறைக்கும் மற்றும் சூரியனின் புறா ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமத்தின் நிறத்தை ஒளிர செய்யும். முன்கூட்டியே ஏற்படும் வயதான தோற்றத்தை குறைக்கும். மேலும் சரும எரிச்சல் மற்றும் அரிப்புகளை குணமாக்கும்.