Face Pack For Open Pores : முகத்துல குழி குழியா இருக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க!

Published : Aug 18, 2025, 01:51 PM IST

முக அழகைக் கெடுக்கும் திறந்துள்ள சரும துளைகளை மூட உதவும் சில சிறந்த ஃபேஸ் பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Face Pack For Open Pores

திறந்த சரும துளைகள் (open pores) பிரச்சனைகளால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். கன்னங்கள், மூக்கு, நெற்றி போன்ற பகுதியை சுற்றி இது காணப்படும். இது முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். மேலும் இந்த பிரச்சனை உள்ளவர்கள் முகத்தில் எப்போதும் எண்ணெய் வழியும். இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால் பல சரும பிரச்சனைகள் வருவதை தடுத்து விடலாம். இத்தகைய சூழ்நிலையில், உங்களது முகம் கொண்டும் குழியுமாக அசிங்கமாக இருக்கிறதா? இதனால் நீங்கள் வெளியில் செல்வதற்கு கூட சங்கடமாக உணர்கிறீர்களா? நீ கவலை வேண்டாம். ஏனென்றால் அதிர்ஷ்டவசமாக இந்த பிரச்சினையை போக்கவும் உதவும் சில ஃபேஸ் பேக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் அடிக்கடி போடுவதன் மூலம் சருமத்தில் திறந்திருக்கும் துளைகள் விரைவில் மூடும். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

26
1. முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் முல்தானி மட்டி, 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 10- 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சிப்பட்டு, சரும துளைகளில் இருக்கும் அடைப்புகள் நீங்கி, சருமம் இறுக்கமாகும்.

36
2. முட்டை வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முட்டையின் வெள்ளை கருவுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை இறுக்கமடைய செய்யும் மற்றும் முகத்திற்கு பிரகாசத்தை கொடுக்கும்.

46
3. தேன் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேனுடன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். எலுமிச்சை சாறு சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்யும் மற்றும் பிரகாசமாகும்.

56
4. தயிர் மற்றும் ஓட்ஸ்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 ஸ்பூன் தயிர் கலந்து அதை முகத்தில் 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான அழுக்கை நீக்கும் மற்றும் சரும துளைகளை இறுக்கமடைய செய்யும். மேலும் சருமத்தை மென்மையாக உதவும்.

66
5. கற்றாழை ஜெல் மற்றும் வெள்ளரிக்காய் சாறு

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு கலந்து முகத்தில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories