2023-ல் யூடியூப்பில் ரசிகர்களால் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டு அதிக Views-களை பெற்ற டாப் 5 தமிழ் சாங்ஸ் லிஸ்ட்

First Published Dec 27, 2023, 1:28 PM IST

2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 தமிழ் பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 5 most viewed tamil songs in Youtube

2023-ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடந்த சில சுவாரஸ்யமான சினிமா நிகழ்வுகள் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டி யூடியூப்பில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளிய டாப் 5 தமிழ் பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1.ரஞ்சிதமே

யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 தமிழ் பாடல்கள் பட்டியலில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. வாரிசு படத்திற்காக தமன் இசையமைத்த இப்பாடலை நடிகர் விஜய்யும், பாடகி மானசியும் இணைந்து பாடி இருந்தனர். இப்பாடலின் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் சேர்த்து யூடியூப்பில் 37 கோடி பார்வைகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

2. காவாலா

கோலிவுட்டில் இந்த ஆண்டு அனிருத் இசையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆன பாடல் காவாலா. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இப்பாடலின் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் சேர்த்து யூடியூப்பில் 36 கோடி பார்வைகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

3. நான் ரெடி தான் வரவா

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இதில் விஜய் பாடிய நான் ரெடி தான் வரவா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இப்பாடலின் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் சேர்த்து 24 கோடி பார்வைகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4. வா வாத்தி

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த திரைப்படம் வாத்தி. இப்படத்தில் ஸ்வேதா மோகன் பாடிய வா வாத்தி பாடல் யூடியூப்பில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. இப்பாடலின் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடல் சேர்த்து 22 கோடி பார்வைகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

5. ஹுகூம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். அனிருத் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. அனிருத் பாடிய ஹுகூம் பாடலின் லிரிக்கல் மற்றும் வீடியோ யூடியூப்பில் 16 கோடி பார்வைகளை பெற்று 5ம் இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்? இயக்குனர் பா.இரஞ்சித் கொடுத்த அசத்தல் அப்டேட்

click me!