கர்ப்பிணி பெண்களே... முதல் மூன்று மாதங்களில் இந்த தவறுகளை செய்யாதீங்க!!

First Published Feb 15, 2024, 2:34 PM IST

கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் என்னென்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம். 

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியான நேரம். ஒரு பெண் கருவுற்றால் அது அவருடைய வாழ்க்கையில் மிக அழகான தருணம் என்றே கூறலாம். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பற்றி நிறைய கனவு காண்பார்கள். 
 

மேலும் இந்த நேரத்தில் அவர்கள் மன அழுத்தம் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கின்றன. அவர்களின் உடல் இந்த நேரத்தில் மிகவும் உணர் திறன் கொண்டது. அதனால் தான் இந்நேரத்தில் அவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை. 

அதுபோல், இந்த நேரத்தில் எந்த கவனக் குறைவும் அவர்களை கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் உணர்ந்துடன் கொண்டவை. அதனால் கற்பனைகள் இந்த நேரத்தில் சில தவறுகளை செய்யக்கூடாது. அவை...

கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கடுமையான உடற்பயிற்சி செய்வது நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கடுமையான உடற்பயிற்சி சிக்கல்களை அதிகரிக்கும். இது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் லேசான உடற்பயிற்சி மட்டுமே செய்யுங்கள். 
 

போதுமான அளவு தூக்கம்: கர்ப்ப காலத்தில் நீங்கள் நன்றா தூங்க வேண்டும். தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். மேலும், கர்ப்ப காலத்தில் நீங்கள் சோர்வாக உணரலாம். எனவே, நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை பெறுவது மிகவும் அவசியம்.
 

மன அழுத்தத்தை தவிர்க்கவும்: கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மோன்கள் மற்றும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் இது நல்லதல்ல. மன அழுத்தம் தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, மன அழுத்தம், பதட்டம் இல்லாமல் அமைதியாக இருப்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!