பெண்களின் அபார வளர்ச்சியிலும் மாறாத கலாச்சாரம்! மகளிர் தின ஸ்பெஷலாக சிந்திக்க வைக்கும் சந்தியா ராகம் சீரியல்!

First Published Mar 5, 2024, 9:46 PM IST

மகளிர் தின ஸ்பெஷளாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெண்களின் பெண்களின் பெருமைகளை கொண்டாடும் வகையில் சந்தியா ராகம் சீரியல் கதைக்களத்தை கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 

அடுப்படியில் அடைபட்டு கிடந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு இணையாக சாதிக்க தொடங்கி விட்டனர், பெண்களின் பெருமை இந்த விண்ணுலகம் முழுவதும் பரவி வருகிறது. எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து சரித்திரம் படைத்து வருகின்றனர். இதற்கெல்லாம் இன்றைய கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பெண்களுக்கான சட்டதிட்டங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றது.

இந்த வளர்ச்சிகளால் நமது கலாச்சாரங்கள் மறைக்கப்பட்டு விட்டதா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பெண்களின் பதிலாக இருந்து வருகிறது, ஜீ தமிழும் இதை மையமாக கொண்டு மகளிர் தின ஸ்பெஷலாக பெண்களின் பெருமைகளை கொண்டாடும் வகையில் சந்தியா ராகம் சீரியல் கதைக்களத்தை கொண்டு சென்று வருகிறது. 

நியூ ஹேர் ஸ்டைல்.. அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே மாறிய ஆராத்தியா! அழகில் அசரவைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!

sandhya raagam serial

சமீபத்திய எபிசோடில் இடம்பெற்ற சடங்கு விஷயம் குறித்து அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மாயாவின் கோபமும் அதற்கு ரகுராமின் விளக்கமும் அடங்கிய ப்ரோமோ வீடியோ சமூக வளையதங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. ரகுராம் சொல்லும் கருத்துகள் அனைத்தும் சரி தான், பெண்களுக்கான சடங்குகள் குடும்பத்தோடு இணைந்து சந்தோசமாக கொண்டாட கூடிய ஒன்று. இதெல்லாம் எங்க குடும்பத்தில் நடக்கலையே என்று வருத்தம் இருப்பதாக பலர் கூறியுள்ளனர். மாயா எப்படி நமது கலாச்சாரங்களையும் அதில் மறைந்திருக்கும் மகிழ்ச்சிகளையும் எப்படி அறிந்து கொள்கிறார் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

அமெரிக்காவில் பிறந்த மாயா தனது அம்மாவின் இழப்பால் இந்தியாவிற்கு வர அவள் இங்கு இருக்கும் கலாச்சாரங்கள் பெண்களுக்கு முட்டுக்கட்டைகளாக தெரிகிறது, இதனால் இவற்றையெல்லாம் வெறுக்கிறாள். காலாச்சாரத்தை பெரிதாக பின்பற்றி வாழும் குடும்பத்தில் இருக்கும் மாயா அதை எப்படி எதிர்கொள்கிறாள், நமது கலாச்சாரத்தின் பெருமைகளில் இருந்து கற்று கொள்வது என்ன? மற்றவர்களுக்கு கற்று கொடுப்பது? என்பது தான் சீரியலின் மைய கதை. இந்த சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinikanth: பிரைவேட் ஜெட்டில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த் குடும்பம்! ஐஸ்வர்யா பகிர்ந்த போட்டோஸ்!

click me!